தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விந்தை உயிரி!

விந்தை உயிரி!

விந்தை உயிரி!


PUBLISHED ON : அக் 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெல்லி மாதிரி வழுவழுப்பாகத் தெரியும் இந்த உயிரினத்தின் பெயர், பச்சைக் கரண்டிப் புழு. (Green spoon worm). மத்திய தரை கடல், செங்கடல், அட்லான்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில், சுமார் 10 மீட்டரில் இருந்து 100 மீட்டர் ஆழத்தில் இவை காணப்படுகின்றன. பொனீலியா விரிடிஸ் (Bonellia viridis) என்பது இதன் உயிரியல் பெயர்.

'பொனீலின்' என்ற பச்சை நிற, விஷத் தன்மை கொண்ட, இரசாயனத்தைக் கொண்டிருப்பதால், இவை பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. இரைகள் எதிர்படும்போது, இந்த பொனீலின் விஷத்தை உமிழ்ந்து எதிரிகளை முடக்கிவிடும்.

பொனீலியா புழுக்களில், பெண் புழுக்கள் சுமார் 15 செ.மீ. நீளம்வரை வளரும். ஆண் புழுக்களோ அதிக பட்சம் 3 மி.மீ. வரை மட்டுமே வளரும்! அதைவிட விந்தை, ஆண் புழுக்கள், பெண் புழுக்களின் இனப்பெருக்க மண்டலத்தில் ஒட்டிக்கொண்டு உயிர் வாழ்கின்றன. அதனால், அவை வெளியில் தென்படாது. பெண் புழுக்கள் மட்டுமே நம் கண்களுக்கு தென்படும்.

பொனீலியா புழுக்களில் கருமுட்டை உருவாகும் நிலையிலேயே, ஆண் அல்லது பெண் என்ற பால் நிர்ணயம் நடப்பதில்லை. பெண் புழுக்கள் இடும் முட்டைகள், கடலின் தரைப் பரப்பில் ஒட்டிக்கொண்டால், அந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள், பெண் புழுக்களாக மாறும். அதுவே முட்டைகள், பெண் புழுக்களின் உடலிலேயே ஒட்டிக்கொண்டு விட்டால், ஆண் புழுக்களாகி விடும். ஆக முட்டைகள் வளரும் சூழலைப் பொறுத்தே, இவற்றில் பால் நிர்ணயம் நடக்கிறது! பொனீலின் நிறமியில் இருக்கும் ஒரு வகை வேதிப்பொருள், முட்டையில் இருக்கும் புழுக்களை ஆணாக மாற்றிவிடுகிறது.

சிறிது காலத்தில் ஆண் புழுக்கள் பெண் புழுவின் மேற்புறத்தில் இருந்து, இடம்பெயர்ந்து பெண் புழுவின் இனப்பெருக்க மண்டலத்துக்குள் போய் ஒட்டிக்கொண்டுவிடும். ஊட்டச் சத்துக்குப் பெண் புழுவைச் சார்ந்தே வாழும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us