நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எட்டு இலக்க எண்ணா?
இங்கே 4, 4, 3, 3, 2, 2, 1, 1 என, எட்டு எண்கள் உள்ளன.
இந்த எண்களைப் பயன்படுத்தி, நீங்கள் ஓர் எட்டு இலக்க எண்ணை அமைக்க வேண்டும்.
அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு.
* இலக்கத்தில், இரு ஒன்றுகளுக்கு இடையே ஓர் எண் மட்டுமே இருக்க வேண்டும்.
* அதேபோல், இரு இரண்டுகளுக்கு இடையே இரு எண்களும்;
* இரு மூன்றுகளுக்கு இடையே மூன்று எண்களும்;
* இரு நான்குகளுக்கு இடையே நான்கு எண்களும் இருக்கும்படி அந்த எட்டு இலக்க எண்ணை அமைக்க வேண்டும்.
எனில், விடை என்ன?
விடைகள்: 41312432

