sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சாகசச் சிறுவன்

/

சாகசச் சிறுவன்

சாகசச் சிறுவன்

சாகசச் சிறுவன்


PUBLISHED ON : ஏப் 09, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 09, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாகசக் கதைகளைப் படிக்க எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்! அதிலும் சிறுவர்கள் செய்யும் சாகசம் என்றால் கூடுதல் சுவாரசியம். அமெரிக்க எழுத்தாளரான மார்க் ட்வெய்ன் (Mark Twain) எழுதிய புகழ்பெற்ற புத்தகம் 'டாம் சாயரின் சாகசங்கள்' (Adventures of Tom Sawyer). டாம் சாயர் என்ற சிறுவன் மேற்கொண்ட சாகசங்களை, இந்தக் கதை விவரிக்கிறது.

டாம், தன் வளர்ப்புத் தாய் வீட்டில் வளர்கிறான். குறும்புத்தனம் மிக்கவன். அவனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதே அவனுடைய வளர்ப்புத்தாயின் விருப்பம். ஆனால், டாம் விளையாட்டுத்தனமாகவே இருக்கிறான். அவனுடைய நண்பன் ஹக்கில்பெரிஃபின் (Huckleberry Finn). அவனுடன் சேர்ந்து ஆராய்ச்சி என்ற பெயரில் சாகசப் பயணங்களை மேற்கொள்கிறான்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற கற்பனை நகரத்தை உருவாக்கி, உயிரோட்டமாகவும், நகைச்சுவை ததும்பும் நடையிலும் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார் மார்க் ட்வெய்ன். 1800களில் வாழ்ந்த அமெரிக்கச் சிறுவர்களின் வாழ்க்கைமுறை எப்படியிருந்தது என்பதை, இந்தக் கதையின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்தப் புத்தகம் 1876இல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. பல மொழிகளில் மொழியெர்க்கப்பட்டுள்ளது. சிறுவர் இலக்கியத்தின் முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது.

- விழியன்






      Dinamalar
      Follow us