PUBLISHED ON : ஏப் 09, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேஷனல் புக் ட்ரஸ்ட் (National Book Trust)
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு மிகச் சிறந்த வாசகர். அவர் கலை, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைப் புத்தகங்கள் வழியே நாடு முழுவதும் கொண்டு சேர்க்க விரும்பினார். அதனைத் தொடர்ந்து 'நேஷனல் புக் ட்ரஸ்ட்' நிறுவனம் 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம், சுமார் 20 மொழிகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எண்ணற்ற புத்தகங்களை வெளியிட்டுள்ளது. முக்கியமாகக் கதைகள், பாடல்கள், கட்டுரைகள் அடங்கிய சிறார்களுக்கான புத்தகங்களைக் குறைந்த விலையில் பதிப்பித்து வருகிறது.
இணையதளம்: http://www.nbtindia.gov.in