PUBLISHED ON : டிச 09, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிப்புகளின் உதவியைக் கொண்டு சொற்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கட்டத்தில் எழுத்துகளை நிரப்ப வேண்டும். கட்டத்தின் மேல் உயிரெழுத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உயிரெழுத்துகள் மெய்யெழுத்துகளோடு சேர்வதால் வரும் உயிர்மெய் எழுத்துகளைத்தான் நீங்கள் நிரப்ப வேண்டும். உயிரெழுத்து இல்லாமல் புள்ளி தரப்பட்டு இருந்தால், அங்கே மெய்யெழுத்து வரவேண்டும். முயலுங்கள்.
1. நிதானம் என்னும் சொல்லுக்கு எதிர்ப்பதம்
2. காலை எழுந்ததும் படிப்பது நல்ல...
3. கும்பிடுவதைக் குறிக்கும் சொல்
4. ஒலிம்பிக் வீரர் வெல்வது
5. நினைவு தப்பிப் போகும் நிலை
விடைகள்:
1.பதற்றம்
2.பழக்கம்
3.வணக்கம்
4.பதக்கம்
5. மயக்கம்