மனம் குவியும் இசை: பொருந்தாததைக் கண்டுபிடியுங்கள்!
மனம் குவியும் இசை: பொருந்தாததைக் கண்டுபிடியுங்கள்!
PUBLISHED ON : டிச 02, 2024

இந்தக் குழுக்களில் உள்ள நான்கு குறிப்புகளில், ஒன்று மட்டும் மற்றவற்றில் இருந்து வேறுபடுகிறது. அது எது என்று கண்டுபிடியுங்கள்.
01. அ. பிபி கிங்
ஆ. ராபர்ட் ஜான்ஸன்
இ. மட்டி வாட்டர்ஸ்
ஈ. எல்விஸ் பிரிஸ்லி
02. அ. கோரா
ஆ. தர்புகா
இ. ஜெம்பே
ஈ. எம்பிரா.
03 அ. சார்லி பார்க்கர்
ஆ. கத்ரி கோபால்நாத்
இ. குன்னக்குடி வைத்தியநாதன்
ஈ. மனோஹரி சிங்
04. அ. கடம்
ஆ. எஸ்ராஜ்
இ. வயலின்
ஈ. சாரங்கி
05. அ. மெளத் ஆர்கன்
ஆ. புல்லாங்குழல்
இ. நாதஸ்வரம்
ஈ. தவில்
விடைகள்: 1. ஈ. எல்விஸ் பிரிஸ்லி இவர் ஒரு பாப் இசைக் கலைஞர். மற்றவர்கள் ப்ளூஸ் கலைஞர்கள்
2. ஆ. தர்புகாமத்தியத் தரைகடல் நாடுகளின் தாள வாத்தியம். மற்றவை ஆப்பிரிக்கத் தாள வாத்தியங்கள்
3. இ. குன்னக்குடி வைத்தியநாதன்இவர் வயலின் கலைஞர். மற்றவர்கள் சாக்ஸபோன் கலைஞர்கள்
4. அ. கடம் இது ஒரு இந்தியத் தாள வாத்தியம். மற்றவை போயிங் தந்தி இசைக்கருவிகள்
5. ஈ. தவில்
இது ஒரு தாள வாத்தியம். மற்றவை அனைத்தும் காற்றிசைக் கருவிகள்