PUBLISHED ON : டிச 02, 2024

சொற்களைக் கூறுகையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று தொடர்ந்து மாற்றி மாற்றிக் கூறிக்கொண்டே செல்வோம். மொழியைப் பயன்படுத்துகையில் இவ்விரு வகைச் சொற்கள்தாம் மிகவும் பயன்படுகின்றன.
பெயர்ச்சொற்களை மட்டும் தொடர்ச்சியாக அமைத்துக் கூறுவது மூளைக்கு வேலையாகும். இடையில் எந்த வினைச்சொல்லும் வரக்கூடாது. எல்லாம் பெயர்ச்சொற்களாக அமைந்த தொடர்கள்.
இந்தப் புதிரில் தொடர்ச்சியாகப் பெயர்ச்சொற்கள் மட்டுமே அமைந்த தொடர்கள் எழுதப்படும். அவற்றில் ஒரு பெயர்ச்சொல் இடையில் விடுபட்டிருக்கும். அதனைக் கண்டுபிடிக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, பல்கலைக்கழகம் என்னும் சொல் பல, கலை, கழகம் ஆகிய மூன்று பெயர்ச்சொற்கள் சேர்ந்த சொல்லாகும். அவற்றில் இடையில் ஒன்று விடுபட்டிருந்தால் கண்டுபிடித்துக் கூறவேண்டும்.
அ) செம்______ப் பூ
ஆ) நாகண_____ய்ப் புள்
இ) கலங்____ விளக்கம்
ஈ) இரு_____க்கொள்ளி எறும்பு
உ) நான்மாடக்_____
ஊ) ஐம்பெருங்_______
எ) பாண்டியன் நெடுஞ்_______
ஏ) மும்முடிச்_______
ஐ) காஞ்சிப் புதுப்_____
ஒ) அறு___ உணவு
-மகுடேசுவரன்
விடைகள்: அ) பருத்தி, ஆ) வாய், இ) கரை, ஈ) தலை, உ) கூடல், ஊ) காப்பியம், எ) செழியன், ஏ) சோழன், ஐ) பட்டு, ஒ) சுவை