PUBLISHED ON : மே 09, 2016

முன்புக்கும் முன்பு ஒரு வெயில் காலம். வெயில் அடித்தது. எறும்புக் கூட்டம் ஒன்று இருந்தது. அது உணவைத் தேடிப் போனது. அந்தக் கூட்டத்தில் ஒரு போக்கிரித்தனமான, திமிர் பிடிச்ச எறும்பும் இருந்தது. ஒரு மரத்தின் கீழே ஒரு புழு ஊர்ந்துகொண்டிருந்தது. எறும்பு புழுவைப் பார்த்தது.
எறும்பு சொன்னது, 'ஏ புழுவே! உன்னைவிட உருவத்தில் மிகவும் சின்னதா இருக்கிற நாங்களே எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறோம்… இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு இப்படி சோம்பேறியாய் மெதுவாய் நடக்குறியே'' என்று ஏளனம் செய்தது.
''இந்த மரத்தின் மேலதான் என்னோட கூடு இருக்கு. தெரியாம கீழே விழுந்துவிட்டேன். என்னால வேகமாப் போக முடியாது'' என்று அப்பாவியாய் பதில் சொன்னது கூட்டுப் புழு.
சில நாட்கள் கழிந்தது. குட்டியாக மழை பெய்து நின்றது. மழையில் நனைந்த மலர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் குறும்புக்கார எறும்பு.
அப்போது, 'அன்பு நண்பா' என கூப்பிடும் சத்தம் கேட்டது. எறும்பு திரும்பிப் பார்த்தது.
கண்களைக் கவர்கிற மாதிரி அழகான வண்ணங்களோடு எதிரில் ஒரு பட்டாம்பூச்சி இருந்தது.
''என்னைத் தெரிகிறதா..? சில நாட்களுக்கு முன்னால் நீ கேலி செய்தாயே, அந்தப் புழுதான் நான். என்னுடைய பருவ காலம் முடிந்து இப்போது உன் எதிரில் வண்ணத்துப்பூச்சியாய் வளர்ந்து நிற்கிறேன்' என்றது.
''நடக்கவே சிரமப்பட்டாய், பார்க்கவே அசிங்கமாக இருந்தாய். அந்தப் புழுவா நீ? இன்று வானத்தில் பறக்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறாயே... ரொம்ப அழகாக இருக்கிறாயே...' என்று பிரமிப்பு விலகாமல் பட்டாம்பூச்சியிடம் மன்னிப்பு கேட்டது அந்த எறும்பு.
அதன் பிறகு அந்த எறும்பு யாரையும் ஏளனம் செய்வதே கிடையாது.
இர.சிபி அகிலன்
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி
சென்னை.
