PUBLISHED ON : மே 09, 2016

எப்படா எக்ஸாம்ஸ் முடியும்னு காத்துக்கிட்டு இருந்த நம்ம எல்லாருக்குமே லீவு கிடைச்சாச்சு.
டெய்லி ஸ்கூலுக்கும், ஸ்பெஷல் கிளாஸ்க்கும் மாத்தி மாத்திப் போனது மட்டுமில்லாம, ஹோம்வொர்க், எக்ஸாம் அது இதுன்னு ரொம்ப சோர்ந்து போய் இருக்கிறோம். அதனால, இந்த சம்மர் லீவுல டி.வி., மொபைல் கேம்ன்னு வீட்டுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கி இருக்காம, ஓடி ஆடி விளையாடித் தீர்த்துருவோம். ஹாலிடேஸ் எல்லாம் ஜாலிடேஸ் ஆ மாற சில விஷயங்களைப் பார்ப்போம்.
ஸ்விம்மிங் - நம்மை உற்சாகப்படுத்தும் உடற்பயிற்சிகளில் ஒண்ணு. வெயில்ல இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு, புதுசா
ஒரு வித்தை கத்துகிட்ட மாதிரியும் ஆச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!
ஆர்ட்ஸ் & ஃபைன் ஆர்ட்ஸ் - நம்மோட திறமைகள் என்னன்னு நமக்குத் தெரியாம இருக்கும். அதை வெளியே கொண்டுவர வைக்கும் மேஜிக்தான் கலை மற்றும் நுண்கலை. இதுல டிராயிங், பெயின்டிங், ஓரிகாமின்னு நிறைய இருக்கு. இதனால, கற்பனைத் திறன் வளரும் தெரியுமா!
டான்ஸ் - சும்மாவே டான்ஸ் ஆடுற நான் ஏன் டான்ஸ் கத்துக்கணும்னு கேக்குறீங்களா? உற்சாகம் தருவது மட்டுமில்லாம கூர்ந்து கவனிக்கும் திறனை வளர்க்க இது உதவும். டான்ஸ் இருக்கும்போது எக்ஸ்ட்ரா எக்சர்சைஸ் எதுக்கு!
டூர் - டூர்ன்னு சொன்னாலே ஏதாச்சும் தூரமான இடத்துக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லி அடம்பிடிக்கக் கூடாது. நமக்குத் தெரிஞ்ச இடங்கள்லயே ரசிக்க எவ்ளோ இருக்கு...! தாத்தா, பாட்டி இருக்குற ஊருக்கோ, அல்லது சொந்தக்காரர்களின் ஊரில் நடக்கும் திருவிழாவுக்கோ போகலாம்.
மியூசிக் - பாட்டு கேக்குறது யாருக்குத்தான் பிடிக்காது? பிடிச்ச விஷயத்தை ஈஸியா கத்துக்கக் கசக்குமா என்ன? மியூசிக்னா பாடுறது, இசைக் கருவிகளை வாசிப்பது, புது டியூன்களை கம்போஸ் பண்றதுன்னு எதுவாகவும் இருக்கலாம். இது நம்மோட மனசை அமைதிப்படுத்தும். பொறுமையைக் கத்துக் கொடுக்கும்.
நீங்க, எல்லா லீவுலயும் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப பண்ற ஆளா?
இல்ல, புதுசு புதுசா பண்ணி ஒவ்வொரு விடுமுறையையும் என்ஜாய் பண்ற ஆளா?
