sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/விருத்தப்பாக்களால் அமைந்த முதல் காப்பியம்

விருத்தப்பாக்களால் அமைந்த முதல் காப்பியம்

விருத்தப்பாக்களால் அமைந்த முதல் காப்பியம்


PUBLISHED ON : மார் 12, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2018


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

* தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி.

* ஐம்பெரும் காப்பியங்களில் முழுமையாகக் கிடைத்தவை மூன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி.

* விருத்தப்பா என்னும் பா வகையால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி.

* வடமொழியில் உள்ள சீவகன் என்னும் அரசனின் கதையைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல்.

* சிந்தாமணி என்பதற்கு, 'ஒளி குன்றாத மணி' என்று பொருள்.

* இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்க தேவர் சமண முனிவர். சோழர் குடியில் பிறந்த இவர், திருத்தகு முனிவர் என்றும் திருத்தகு மகாமுனிவர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.

* சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டுமன்றி இல்லறச்சுவையையும் பாடமுடியும் என்பதை நிறுவும்பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர்.

* திருத்தக்க தேவரை 'தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்' என்று வீரமாமுனிவர் பாராட்டியுள்ளார்.

* சீவகசிந்தாமணிக்கு முன் 'நரி விருத்தம்' என்னும் சிறு நூலை திருத்தக்க தேவர் இயற்றியுள்ளார்.

* இந்நூல், பதின்மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டது. அந்தப் பிரிவுகளுக்கு இலம்பகம் எனப் பெயர்.

* முத்தி இலம்பகம் தவிர்த்து மற்ற இலம்பகங்கள், பெண்களின் பெயரில் அமைந்துள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில், திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

* சீவகசிந்தாமணி 3,145 பாடல்களைக் கொண்டது.

* இக்கதையின் நாயகன் சீவகன், எட்டுப் பெண்களை மணந்தான். அதனால் இந்நூலுக்கும் மணநூல் என்ற பெயரும் உண்டு.

- நிலவரசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us