தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/யானைக்கு இத்தனை பெயர்களா?

யானைக்கு இத்தனை பெயர்களா?

யானைக்கு இத்தனை பெயர்களா?


PUBLISHED ON : அக் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு புலவர் இருந்தார். அவர் வீட்டில் கடுமையான வறுமை. அந்த ஊரின் வள்ளலைப் பார்த்துப் பாட்டு பாடி பரிசு வாங்கி வரச் சென்றார். வள்ளலும் ஒரு பரிசு கொடுத்தார். அதை வீட்டிற்கு அருகே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, மனைவியிடம் வந்தார். மனைவி, ''என்ன கொண்டு வந்தீர்கள்?'' என்று ஆவலாகக் கேட்டாள்.

புலவர் 'வம்பதாம் களபம்' என்றார். உடனே மனைவி, “வாசனை உடைய சந்தனம் கொண்டு வந்தீர்களா? அதை நீங்களே பூசிக்கொள்ளுங்கள்'' என்றாள் கோபமாக.

புலவர் மறுத்து, ''சந்தனம் இல்லை, 'மாதங்கம்'” என்றார். உடனே மனைவி மகிழ்ந்து, ''ஓ... மதிப்புமிக்க தங்கத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா? இனி நம் வறுமை தீர்ந்துவிடும்'' என்றாள் மகிழ்ச்சியாக.

புலவரோ நேரடியாகப் பதில் சொல்லாமல் தவிர்த்தார். “பம்பு சீர் வேழம்” என்றார்.

மனைவி ''கரும்புதான் பரிசாகக் கொண்டு வந்தீர்களா? சரி, கொண்டு வாருங்கள் கடித்து உண்ணலாம்'' என்றாள் மனத்தைத் தேற்றியபடி.

''கரும்பு இல்லை, பகடு'' என்றார் புலவர்.

''எருமைக் கடாவைப் பரிசாகக் கொண்டு வந்தீர்களா? சரி விடுங்கள். வயலில் உழுவதற்குப் பயன்படும்'' என்றாள் சோகம் தவிர்த்து.

''எருமையும் இல்லை. கம்பமா'' என்றார் புலவர்.

''கம்பு தானியத்தில் செய்யப்பட்ட மாவா? கொண்டு வாருங்கள், களி செய்து சாப்பிடலாம்'' என்றாள் மனைவி.

''கம்பு மாவு இல்லை, கைம்மா'' என்றார் புலவர்.

“அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?” புலவரின் மனைவி கண்கலங்கி நின்றாள்.

இந்தப் பாடலில் இடம்பெறும் களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா ஆகிய சொற்களுக்கு புலவரின் மனைவி குறிப்பிட்ட பொருட்களையும் குறிக்கும், கூடவே யானையையும் குறிக்கும்.

யானையை வைத்து உடனே பசி போக்க முடியுமா? அதனால்தான் புலவரின் மனைவி கண்கலங்கி நின்றாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us