தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நாங்க ரெடி! நீங்க ரெடியா? - 10 வகுப்பு தமிழில் மதிப்பெண் அள்ள

நாங்க ரெடி! நீங்க ரெடியா? - 10 வகுப்பு தமிழில் மதிப்பெண் அள்ள

நாங்க ரெடி! நீங்க ரெடியா? - 10 வகுப்பு தமிழில் மதிப்பெண் அள்ள


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

உரிய விடைகளோடு இலக்கணப் பிழை, எழுத்துப் பிழையின்றி கையெழுத்து தெளிவாக இருந்தால் தமிழ்ப்பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறலாம்.

ஒரு மதிப்பெண் புறவய (Objective) வினாக்கள்: செய்யுள் பகுதியில் 10, உரைநடைப்பகுதியில் 10 கேட்கப்படுகின்றன. இவற்றிற்கு உரிய விடையைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடங்களை நிரப்புதல் ஆகியனவற்றைத் தயார் செய்க.

செய்யுள் பகுதியில் 1,2,3,4,5,8,9 இயல்களில் உள்ள பொருத்துக பகுதியைக் கவனத்தில் கொள்க.

குறுவினாக்கள்: சுருக்கமாக நேரடியாக விடையளித்தால் போதும்.

முக்கியமானவை: செய்யுள் 1,3,5,6,7,9 இயல்கள்; உரைநடை 1,5,6,7,8,9,10 இயல்கள்.

சிறுவினாக்கள்: தலைப்பிட்டு எழுதவும். முக்கியமானவை: செய்யுள் 2,3,4,8,10 இயல்கள் -உரைநடை 2,3,4,6,8 இயல்கள்.

நெடு வினா: தலைப்பு, முன்னுரை, உட்தலைப்புகள் முடிவுரையோடு எழுத வேண்டும்.

செய்யுள்: திருக்குறளிலிருந்து ஒரு வினாத் தொடர் நிலைச் செய்யுளிலிருந்து ஒரு வினா வரும். விடை கட்டுரை வடிவில் இருக்க வேண்டும். இடையிடையே பாடலடிகளை மேற்கோள் காட்டுவது முக்கியம் .

உரைநடை:முதல் ஐந்து இயல்களிலிருந்து ஒரு வினா கண்டிப்பாக இடம் பெறும்.

பயன்படுத்துதல் திறன்: 4,6,9,10 ஆகிய இயல்களில் செய்யுள் பகுதியிலிருந்து ஏதேனும் ஒரு பாடல் கொடுத்து ஐந்து வினாக்கள் வினவப்படும்.

மனப்பாடப் பகுதி: மனப்பாடப் பகுதி எழுதும் போது நூற்பெயரும் ஆசிரியர் பெயரும் எழுதுவது சிறப்பு.

இலக்கணப் பகுதியிலிருந்து 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 10 வரும். ('உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக'5 வினாக்கள். 'கோடிட்ட இடங்களை நிரப்புக' - 5 வினாக்கள்)

இரு மதிப்பெண் வினாக்கள்- 5.

இவற்றினை சான்று காட்டி எழுத வேண்டும்.

ஐந்து மதிப்பெண் வினாக்கள்: 1) வெண்பாவின் பொது இலக்கணம் அல்லது ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் 2) அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக 3) அணி இலக்கணம். இவற்றில் ஏதேனும் 2 வரும்.

சொற்பொருள் பின்வரு நிலையணி, தற்குறிப்பேற்ற அணி, வஞ்சப் புகழ்ச்சி அணி, உவமை அணி மிகவும் முக்கியம். இவற்றை அணி இலக்கணம், எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் படிநிலைகளில் எழுத வேண்டும்.

தமிழாக்கம்: ஆங்கிலப் பத்தி (3 மதிப்பெண்), பழமொழி (2 மதிப்பெண்). பாட நூலுள் உள்ளனவற்றைப் படித்தால் போதுமானது.

கதையை நிறைவு செய்தல் பகுதியைக் கற்பனை நயத்துடன் எழுதவும். அல்லது கவிதை எழுதுதல் பகுதிக்கு மழை, முயற்சி, கடல், குழந்தை, நட்பு என்னும் தலைப்புகளில் 8 வரிகளில் தயார் செய்து கொள்வும்.

பாடல் நயம் பாராட்டல்: முன்னுரை, ஆசிரியர் குறிப்பு, திரண்ட கருத்து, தொடை நயங்கள் (மோனை, எதுகை, இயைபு) அணி நயம், முடிவுரை ஆகிய தலைப்புகளில் எழுதவும்.

படிவம் நிரப்புதல் பகுதியில் உங்கள் பெயரை எழுதக் கூடாது. வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள பெயரையே எழுத வேண்டும்.

நண்பனுக்குக் கடிதம்: இடம், நாள், விளித்தொடர், கடிதச் செய்தி, கையொப்பம், உறைமேல் முகவரி என்னும் அமைப்பிலும் விண்ணப்பம்: விடுநர், பெறுநர், விளித்தொடர், பொருள், விண்ணப்பச் செய்தி, வலப்பக்கம் கையொப்பம், இடப்பக்கம், இடம், நாள் உறைமேல் முகவரி என்னும் அமைப்பிலும் இருத்தல் வேண்டும்.

பொதுக்கட்டுரையில் இடையிடையே பொருத்தமான பழமொழிகள், மரபுத் தொடர்கள், பொன்மொழிகள், செய்யுள் மேற்கோள்கள் இடம் பெறுதல் அவசியம்.

புலவர் சு. மதியழகன்,

தேசிய நல்லாசிரியர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us