PUBLISHED ON : மார் 20, 2017
தலைப்பிலுள்ள கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).
உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் இறுதியில் கூறியிருக்கிறோம்.
1. சில அரபு நாடுகளில் குற்றவாளிகளின்மீது பொதுமக்கள் கற்களை வீசுவதுண்டு. இதுபோன்ற தண்டனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
அ) மிகவும் நியாயம். நம் நாட்டிலும் அது போன்ற தண்டனைகள் இடம் பெற வேண்டும்.
ஆ) அநியாயம், காட்டுமிராண்டித்தனம்
இ) ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தனி நீதி!
2. உங்கள் பர்ஸை ஒரு சிறுவன் பிக்பாக்கெட் அடித்துவிட்டு ஓடுகிறான். அவனைப் பிடித்து விடுகிறீர்கள். பிறகு அவனை என்ன செய்வீர்கள்?
அ) போலீஸிடம் ஒப்படைப்பேன்
ஆ) பர்ஸைப் பெற்றுக் கொண்டு எச்சரித்து அனுப்பி விடுவேன்.
இ) நாலுபேரை சேர்த்துக் கொண்டு அவனை புரட்டி எடுத்து விடுவேன்.
3. உங்களுக்கு அதிகம் பிடித்த பொன்மொழி எது?
அ) ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு.
ஆ) அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவ மாட்டான்
இ) வம்புச் சண்டைக்குப் போகாதே. வந்த சண்டையை விடாதே.
4. கோபத்தில் கையில் இருக்கும் பொருளை வீசி எறிந்ததுண்டா?
அ) கிடையாது
ஆ) சில முறை
இ) பல முறை
5. இவர்களில் யாருடைய அணுகுமுறை மிகச் சிறந்தது என்று நினைக்கிறீர்கள்?
அ) மகாத்மா காந்தி
ஆ) சர்தார் படேல்
இ) வாஞ்சிநாதன்
6. நீங்கள் ஒரு பிக்னிக்கில் கலந்து கொள்ள விருப்பப்படுகிறீர்கள். பெற்றோர் கூடாது என்கிறார்கள். என்ன செய்வீர்கள்?
அ) அவர்களுடன் சாப்பிட மாட்டேன். அவர்களுடன் பேச மாட்டேன்.
ஆ) 'அதெல்லாம் முடியாது. போய்தான் தீருவேன்' என்று உரத்த குரலில் கத்துவேன்.
இ) ஏன் மறுக்கிறீர்கள் என்ற காரணத்தைக் கேட்டு அதற்குரிய சமாதானத்தை அளித்து அவர்களை ஒப்புக் கொள்ள முயற்சிப்பேன்.
விடைகள்
அ ஆ இ
1. 0 8 4
2. 4 8 0
3. 8 0 4
4. 8 4 0
5. 8 4 0
6. 4 0 8
உங்கள் மொத்த மதிப்பெண்
40-48% அமைதியான வழியைக் கடைப்பிடிக்கிறீர்கள். வாழ்த்துகள்.
20-39% அமைதியானவர் என்றாலும் வன்முறை எண்ணம் அவ்வப்போது தலைதூக்குகிறது. மேலும் கட்டுப்பாடுகள் தேவை.
-20 இவ்வளவு வன்முறை உங்களிடம் இருந்தால் உங்கள் வருங்காலம் பிரச்னைக்குரியதாகிவிடும். உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
- ஆருத்ரன்

