PUBLISHED ON : செப் 30, 2024
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு, பிரபலமான சிறார் இலக்கியக் கதாபாத்திரங்களையும், அவர்கள் எந்தக் கதையின் நாயகர்கள் என்பதையும் கண்டுபிடியுங்கள்!
1. காடுகளில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டு, பாலு என்ற கரடியுடனும் பகீரா என்ற சிறுத்தையுடனும் நட்பு கொள்ளும் சிறுவன் யார்?
2. இந்தியாவின் மலைகளில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி அழகான நீல நிறக் குடையைப் பொக்கிஷமாக வைத்திருக்கிறாள், இது மற்றவர்களிடையே பொறாமையை ஏற்படுத்துகிறது. அந்தச் சிறுமி யார்?
3. ஒரு மாபெரும் முகலாய பேரரசர் தனது அரசவையை அடிக்கடி கடினமான கேள்விகளால் சோதித்தார். இவரது அவையில் இருந்த அமைச்சர் அரசரின் கேள்விகளுக்கு ஏற்றபடி விடையளித்துத் தன் புத்திசாலித்தனத்தால் அனைவரையும் ஈர்த்தவர். யார் இவர்கள்?
4. நீண்ட கூந்தல் கொண்ட இளம்பெண். மாயாஜால வலையில் சிக்கி இருக்கும் இந்தப் பெண்ணை, அழகிய இளவரசன் மீட்கிறான்?
5. மால்குடியைச் சேர்ந்த குறும்புக்காரப் பையன், பள்ளி நேரத்தில், தனது நண்பர்களுடன் இணைந்து சேட்டை செய்து, வாசகர்களைக் கவர்ந்தவன்?
விடைகள்:
1. மௌக்ளி - த ஜங்கிள் புக்,
2. பின்யா -- த ப்ளூ அம்ப்ரெல்லா,
3. அக்பர், பீர்பால், 4. ரபுன்செல்,
5. சுவாமி -- சுவாமி அண்ட் தெ ஃப்ரெண்ட்ஸ்