
குறிஞ்சிச் செடிகள் புதர் வகையைச் சேர்ந்தவை.
உண்மை. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இவை பரவலாக வளர்கின்றன. இவற்றில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களால் இந்த மலைப் பிரதேசமே நீல நிறத்தில் தோன்றுகிறது, எனவே இந்த மலைத் தொடருக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலான்தீஸ் குந்தியானா (Strobilanthes kunthiana) என்பது அவற்றின் தாவரவியல் பெயர். இவை மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீ. உயரத்தில் வளரும் இந்தச் செடிகள், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கின்றன.
வரிக்குதிரை தனித்து வாழும் விலங்காகும்.
தவறு. வரிக்குதிரை ஒரு சமூகவிலங்காகும். இவை எப்போதும் மந்தைகளாக வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு தாவர உண்ணி. இந்த விலங்கு நின்றபடி தூங்கும் தன்மை கொண்டது. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தைச் சாய்த்தபடி நின்றுகொண்டே தூங்கும். இதன் உயரம்
2 மீட்டர், நீளம் 3 மீட்டர், எடை 250 முதல் 500 கிலோ வரை இருக்கும். இவற்றின் உடலில் இருக்கும் வரிகள் மனிதர்களின் கைரேகை போல ஒவ்வொரு விலங்கிற்கும் தனித்துவமாக இருக்கும்.