PUBLISHED ON : பிப் 05, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் (மெய்நிகர் நாணயம்) மற்றும் அது சார்ந்த சேவைகளுக்கான விளம்பரங்கள் இனி தங்கள் வலைதளத்தில் தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் (Facebook) நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கிறது. அதேசமயம், வேறு பல நிறுவனங்கள், மெய்நிகர் நாணயங்களை உள்நோக்கத்தோடு, மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றன. அதைத் தாங்கள் ஏற்பதில்லை, அதனால், மெய்நிகர் நாணயங்களுக்கான விளம்பரங்களை வெளியிடுவதில்லை என்று அறிவித்துள்ளது.