தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/அமிலம் செதுக்கிய அழகிய குகைகள்

அமிலம் செதுக்கிய அழகிய குகைகள்

அமிலம் செதுக்கிய அழகிய குகைகள்


PUBLISHED ON : அக் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கைதேர்ந்த சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான சிற்பங்கள், சிலைகள் போலக் காணப்படும் அழகிய போரா குகைகளின் அமைப்பு அனைவரையும் கவரக்கூடியது. 'போரா குஹாலு' என்று தெலுங்கு மொழியில் அழைக்கப் படும் போரா குகைகள் (Borra Caves) இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்று. சுண்ணாம்புப் பாறை அடுக்குகளால் இயற்கையாக உருவாகி உள்ள இந்தக் குகைகளின் உள்ளே 'ஸ்பீலியோதெம்' (Speleothems) எனப்படும் கனிமப் படிவங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. போரா குகையிலிருந்துதான் கோஸ்தானி (Ghosthani) நதி உருவாகிறது. இந்த நதி ஒடிஸா மாநிலம் வரை போகிறது. இந்தியப் புவியியல் அளவீட்டு அமைப்பைச் சேர்ந்த 'வில்லியம் கிங் ஜார்ஜ்' என்பவர் 1807ல் போரா குகைகளைப் பற்றி கண்டறிந்து தெரிவித்தார்.

தோற்றம்: 40 கோடி வருடங்களுக்கு முன்பு ஆழமில்லாத கடற்பரப்பில் ஒன்றன் மீது ஒன்றாக ஏற்பட்ட சுண்ணாம்புப் பாறை அடுக்குகளால் உருவானவை. காலப்போக்கில் தண்ணீர் மட்டம் குறையக்குறைய மேலே இருக்கும் சுண்ணாம்புப் பாறை அடுக்குகளின் நடுவில் காற்று புகுந்து, இடைவெளி ஏற்பட்டது.

இந்த இடைவெளியில் பனிப்பொழிவுகள் விழுந்து அதில் கார்பன் டை ஆக்சைடு சேர்ந்து 'கார்பானிக்' அமிலமாக (Carbonic Acid) மாறியது. இந்த கார்பானிக் அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன மாற்றத்தால் சுண்ணாம்புப் பாறைகளை கரைத்து குகைகளாக உருமாறின. பூமியின் கீழ் பல நூறு அடிகள் பரப்பளவிற்கு விரிந்து காணப்படும் போரா குகைகளில் கசியும் மழை நீர், உள்ளிருக்கும் காற்றுடன் சேர்ந்து, உப்புப் படிகங்களாக மாறுகின்றன.

இந்த உப்புப் படிகங்கள் குகைகளின் மேல் இருந்து 'ஸ்டாலக்மைட்' (Stalagmite) என்ற ஊசிப் பாறைகளாக தொங்குகின்றன.

அமைவிடம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரத்தின் அருகில் உள்ள அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக போரா குகைகள் அமைந்துள்ளன.

2,313அடி: கடல் மட்டத்திலிருந்து 'போரா' குகைகள் அமைந்துள்ள உயரம்



80 மீட்டர் :
'போரா' குகைகள் ஆழம்

- ப.கோபாலகிருஷ்ணன்

எழுத்தாளர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us