தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அழகிய ஆபத்து

அழகிய ஆபத்து

அழகிய ஆபத்து


PUBLISHED ON : நவ 20, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெட்டி ஜெல்லி மீன்

ஆங்கிலப் பெயர்: 'பாக்ஸ் ஜெல்லி ஃபிஷ்'

(Box Jelly Fish)

உயிரியல் பெயர்: 'குபோஸோவா' (Cubozoa)

வேறு பெயர்கள்: சொறி மீன், கடல் சொறி, சொறி முட்டை, இழுது மீன்

உயரம்: 15 அடி வரை

அகலம்: 25 செ.மீ.

எடை: 2 கிலோ வரை

ஆயுட்காலம்: ஓராண்டு

பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் பல கடல்வாழ் உயிரினங்கள், ஆபத்து நிறைந்தவையாகவும் உள்ளன. எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக, இயற்கை அவற்றின் உடல் அமைப்பை அவ்வாறு ஏற்படுத்தியிருக்கிறது. அழகாகவும் மிருதுவாகவும் பஞ்சு போல இருக்கும் கடல்வாழ் உயிரினம் 'பெட்டி ஜெல்லி மீன்'. குழியுடலிகள் இனத்தைச் சேர்ந்தது. உருவத்தில் மிகச்சிறியவை. உடலைச் சுற்றி நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும் விஷத்தன்மை உடைய இதன் கைகள் போன்ற பகுதி, 'டென்டகில்ஸ்' (Tentacles) எனப்படும். சுமார் 15 அடி நீளம் வரை உள்ள உணர்கொம்புகள், ஒரு பெட்டி ஜெல்லி மீனில் 60 வரை இருக்கும்.

இதன் உடல் அமைப்பு குடை வடிவத்திலும், வாய் சதுரமாகவும் இருக்கும். கீழ்நோக்கிச் செல்லும் வாய், குழாய்ப் பகுதி உடையது. இந்தக் குழாயின் ஒரு முனையில் உள்ள துளைப் பகுதியில் வாயும், பின் முனையில் உள்ள துளைப்பகுதி கழிவு நீக்க உறுப்பாகவும் செயற்படுகிறது. உணர்கொம்புகள் ஒளி, மணம், அழுத்தம் போன்ற புறத்தூண்டல்களை உணரும் தன்மை உடையவை. உடல் பசை போல வழுவழுப்பாக இருக்கும். இவை நாலா புறங்களிலும் நகரும் திறன் பெற்றவை. இருப்பதே தெரியாமல் மிதந்துகொண்டிருக்கும். நீரில் மிதவை உயிரினங்கள், சிறு மீன்கள், இறால்கள் போன்றவையே இவற்றின் உணவு. தனது நீண்ட உணர்கொம்புகளால் பிடித்து விஷம் பாய்ச்சி செயலிழக்கச் செய்து, இரையைக் கொன்று உண்ணும். எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளவும் உணர்கொம்புகளையே பயன்படுத்துகின்றன. மனிதர்களையும் கொல்லும் விஷத்தன்மை உடையது. இந்தோ - பசிபிக் கடல் பகுதிகளில் குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆசிய நாடுகளின் கடல் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.

- ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us