தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முள் மரத்தில் மூலிகை

முள் மரத்தில் மூலிகை

முள் மரத்தில் மூலிகை


PUBLISHED ON : நவ 20, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்யாண முருங்கை

ஆங்கிலப் பெயர்கள்: 'டைகர்ஸ் கிளாவ்' (Tiger's Claw), 'இன்டியன் கோரல் ட்ரீ' (Indian Coral Tree), 'சன்ஷைன் ட்ரீ' (Sunshine Tree)

தாவரவியல் பெயர்கள்: 'எரித்ரினா வெரிகட்டா' (Erithrina Variegata), 'எரித்ரினா இன்டிகா' (Erithrina Indica)

தாவரக் குடும்பம் : 'ஃபபாசியே' (Fabaceae)

வேறு பெயர்கள்: முள் முருங்கை, முருக்க மரம், பாரிஜாதா (சமஸ்கிருதம்)

ஏராளமான மருத்துவக் குணம் கொண்ட மூலிகை மரம் கல்யாண முருங்கை. முட்களையும், மென்மையான தண்டுப் பாகத்தையும் உடையது. சுமார் 85 அடி உயரம் வரை வளரும். இலையுதிர் காடுகளிலும், வெப்ப மண்டலப் பகுதிகளிலும் இயல்பாகவே வளரும். வீட்டுக்கு வேலியாகவும் வளர்க்கப்படுகிறது. பிறப்பிடம் கிழக்கு ஆப்பிரிக்கா. பின் தெற்கு ஆசியா, வட ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல் தீவுகள் மற்றும் பிஜி தீவுகளில் பரவியது.

இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும். அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும். பூக்கள், இலைகள் துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையவை. காய்கள் முருங்கைக் காயின் தோற்றத்தில் இருக்கும். கணுக்கள் மூலமும், விதை மூலமும் இந்த மரம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. கணுக்களை வெட்டி ஈர மண்ணில் நட்டால் வளரும்.

இந்த மரத்தின் இலை, பூ, விதை, பட்டை ஆகியவை, இயற்கை மருத்துவத்தில் பயன்படுகின்றன. நிலங்களைப் பாதுகாக்க அமைக்கப்படும் வேலிகளாகவும் இதன் கணுக்கள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இலைகள் முயல் மற்றும் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. மிளகுக்கொடிகளைப் படரவிடவும், காபிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காகவும் இதை வளர்க்கிறார்கள். தோட்டங்களில் அலங்காரச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது.

சோயா விதை போல இருக்கும் இதன் கொட்டையை தரையில் உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்பளித்துவிடும். 'சூடு கொட்டை' எனப்படும் இதன் விதையை வைத்து சிறுவர்கள் விளையாடும் வழக்கம் உண்டு. எடை குறைவாக உள்ளது என்பதால், தெருக்கூத்து அணிகலன்கள் செய்ய இந்த மரத்தின் கட்டை பயன்படுகிறது.

மருத்துவப் பயன்கள்:

கபம் எனப்படும் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது. இது ஓர் இயற்கை மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி.

- கி.சாந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us