தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எல்லோரையும் கவர்ந்த பீபீ எய்ட்...

எல்லோரையும் கவர்ந்த பீபீ எய்ட்...

எல்லோரையும் கவர்ந்த பீபீ எய்ட்...


PUBLISHED ON : ஜன 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஸ்டார் வார்ஸ் (Star Wars)' பட வரிசையின் 7வது பாகமான 'தி போர்ஸ் அவேக்கன்ஸ்' (The Force Awakens) திரைப்படம், 2015 டிசம்பரில் வெளியானது. அதில் முக்கியப் பாத்திரமாக வரும் 'பீபீ எய்ட்' (BB8) என்ற ரோபோ சிறுவர்களையும் பெரியவர்களையும் மிகவும் கவர்ந்தது.

ரோபோ பற்றி நமக்கு உள்ள கற்பனைக்கு நேர்மாறாக, அது பந்து வடிவில் பார்க்க 'க்யூட்டாக' இருக்கிறது. பந்துக்கு மேலே தலை போல் இருக்கிறது ஓர் அரைவாசிப் பந்து! அது எங்கும் உருண்டு கொண்டே செல்கிறது. உருளும்போது அதன் தலை இப்படியும் அப்படியுமாக அசைந்தாலும் கீழே விழுவதில்லை. கீழே உருளும் பந்தோடு ஒட்டாமல் மேல் பாதி தலை மிதப்பது போலவே இருக்கிறது.

இதுபோல நிஜத்தில் இருக்க முடியுமா? ஸ்பியரோ (Sphero) என்ற நிறுவனம் இதே போல ஒரு ரோபோவை 2010ல் உருவாக்கி, காப்புரிமையும் பெற்றுள்ளது. ஸ்டார் வார்ஸ் படத்தை தயாரிக்கும் டிஸ்னி ஸ்டூடியோவுக்கு (Disney Studio) சொந்தமானது ஸ்பியரோ. அதனால், படத்தின் இயக்குநர் ஜே.ஜே.ஆப்ராம்ஸ் அதே வடிவில் பீபீ எய்ட்டை உருவாக்க முடிவெடுத்தார். எனவே, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (Computer Graphics) இல்லாமல் அசல் ரோபோவை வைத்தே படப்பிடிப்பு நடந்தது! ஸ்பியரோவின் தொழில்நுட்பமும், 'கிரியேச்சர் எஃப்.எக்ஸ்' (Creature FX), என்ற நிறுவனமும் படப்பிடிப்பில் பீபீ எய்ட்டை வேலை வாங்க உதவின.

பீபீ எய்ட் எப்படி இயங்குகிறது என்ற மர்மத்தையும் இயக்குநர் விளக்காததால், இணையத்தில் இது பற்றி பல ஊகங்கள் உலவுகின்றன. www.howbb8works.com தளத்தினர், காந்தத் துருவங்களின் ஈர்க்கும், விலக்கும் சக்தியை வைத்தே தலை தனியாக மிதக்கிறது என்கிறார்கள் அவர்கள். அதேபோல பீபீ எய்ட்டுக்கு 'பேலன்ஸ்' தர 'கைராஸ்கோப் (Cheiroscope) சாதனம் உதவுகிறது. உருண்டு செல்ல 'ஆக்சலரோ' மீட்டர்களும் (Accelerometer), உள்ளுக்குள் மோட்டார் சக்தியுள்ள சிறு சக்கரங்களும் பல உணர்வான்களும் உதவியிருக்கலாம் என அந்த இணைய தளத்தினர் விளக்குகிறார்கள். ஆனால், தகவல்கள் உறுதி செய்யப் படவில்லை.

'திடுக்'கென்று எந்தத் திக்கிலும் உருண்டு செல்லும் ரோபோக்களால், இரண்டு கால், மூன்று கால் மற்றும் நான்கு கால் ரோபோக்களைவிட வேகமாகப் பயணிக்க முடியும் என்கிறார்கள் அசல் ரோபோவியலாளர்கள். இவற்றுக்கு 'ஹோலோனோமிக் (Holonomic)' ரக ரோபோக்கள் என்று பெயர்கூட உண்டு.

அறிவியல் புனைகதை (சயன்ஸ் ஃபிக்சன் - Science Fiction) உலகில் மனித வடிவ ரோபோ, ஆண்ட்ராய்ட் (Android) என்றும், மனித வடிவல்லாத ரோபோ, 'ட்ராய்ட்' (Droid) என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஸ்டார் வார்ஸ் படத் தொடரின் முதல் ஆறு பாகங்களிலும் ஒரு ஆண்ட்ராய்டும், ஒரு ட்ராய்டும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளன. தங்க நிறத்தில் பளபளக்கும் 'சீத்ரீ பீஓ' (C3P0) என்ற ரோபோ ஒரு ஆண்ட்ராய்ட். மூன்று கால்களுடன் உலவும் 'ஆர்ட்டூ டீட்டூ' (R2D2), ஒரு ட்ராய்ட்!

ஸ்டார் வார்ஸ் உலகில் வலம் வரும் ரோபோக்கள் தங்கள் எஜமானர்களுக்கு சேவை புரிபவை. அவை செய்யும் வேலைகளை வைத்து அவற்றை வகைப்படுத்தியிருக்கிறார் கதாசிரியர் லூகாஸ். சீத்ரீ பீஓ ஓரு 'ப்ரோட்டோக்கால்' (Protocol) ட்ராய்ட். பல கிரகங்களைக் கொண்ட விண்வெளிப் பேரரசில் வாழும் மக்கள் மற்றும் வினோத உயிரினங்களின் வாழ்க்கை முறையைத்தான் சித்திரிக்கிறது ஸ்டார் வார்ஸ். இதனால் பல கிரகங்களின் வேறுபட்ட கலாசாரங்கள், மொழிகள், பழக்க வழக்கங்களை மொழிபெயர்க்கத் தெரிந்த ஆண்ட்ராய்டுகளை அந்த மக்கள் உருவாக்கி உதவியாளர்களாக அமர்த்திக்கொள்கிறார்கள். உதாரணமாக சீத்ரீ பிஓவுக்கு 60 லட்சம் தகவல் பரிமாற்ற சமிக்ஞைகள் தெரியும்.

ஆர்ட்டூ டீட்டூவும் உதவிகரமான ட்ராய்டுதான். இதனிடம் ஹோலோகிராம் புரஜக்டர் (Hologram Projector), தலைக்கு மேல் கழுத்தை நீட்டும் கேமிரா, மூன்று கால்களுக்கடியில் ராக்கெட் பூஸ்டர்கள் (Rocket booster), இயந்திரங்களைச் சரி பார்க்கும் திறன் எல்லாம் ஆர்ட்டூவுக்கு உண்டு.

பீபீ எய்ட்டைப் போலவே விசில் பாஷைதான் ஆர்ட்டூவும் பேசும். இதற்கும் லேசாக கோபம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் உண்டு. எஜமானியான இளவரசி லீயா மற்றும் அவரது சகோதரரான ஜெடாய் வீரர் லூக் ஸ்கைவாக்கர் ஆகியோர் மீது விசுவாசம் அதிகம். சீத்ரீ பீஓவுடன் அடிக்கடி சண்டை போட்டாலும் இருவரும் நல்ல நண்பர்கள்.

பலரும் நினைப்பது போல ஸ்டார் வார்ஸ் பட வரிசை ஒரு அறிவியல் புனைகதை அல்ல. ஸ்டார் வார்ஸ் கதையை படைத்தவரும், முதல் 6 பாகங்களை தயாரித்து, முதலாம் பாகத்தையும் நான்காம் பாகத்தையும் இயக்கியவருமான ஜார்ஜ் லூகாஸ், இதை ஒரு 'நவீனப் புராணம்' என்கிறார். அதாவது, மாடர்ன் மித் (Modern myth)!

தைத் தொடர் நடப்பது பூமி காலண்டரின்படி 1710ஆம் ஆண்டு முதல் 1940 வரை! அதுவும், பூமியிலிருந்து பல லட்சம் ஒளி வருடங்கள் தொலைவில், வேறு ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள கிரகங்களில். அங்கே வாழ்பவை தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய மனிதர்கள் மற்றும் உயிரினங்கள்!

அதனால்தான் எல்லா 'ஸ்டார் வார்ஸ்' படங்களும், 'வெகு காலத்திற்கு முன்பு, வெகு தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்திலே…' என்ற பீடிகையுடன் தொடங்குகின்றன.

இந்த கற்பனை விண்வெளி இதிகாசம், உலகெங்கும் புகழ் பெற்றதால் ஸ்டார் வார்ஸ் படத்தொடரை ஜார்ஜ் லூகாசிடமிருந்து 4 பில்லியன் டாலர்களுக்கு டிஸ்னி ஸ்டூடியோ விலைக்கு வாங்கியது.

ஸ்டார் வார்ஸ் நிஜ உலகில் பலருக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. ஐரோபோ (Irobot) என்ற நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஹெலன் கிரெய்னர், 1977ல் வந்த ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் ஆர்ட்டூ டீட்டூவின் தீவிர ரசிகை என்கிறார். ஸ்டார் வார்ஸில் வரும் ஆர்ட்டூ டீட்டு ஒரு அசல் ரோபோ அல்ல, அதற்குள் உயரம் குறைவான ஒரு மனிதர் இருந்துதான் அதை இயக்குகிறார் என்ற உண்மை தெரிந்ததும் அவர் நொந்து போனாராம். அதே போல மனிதர்களுக்கு உதவும் ரோபோவைத் தயாரிக்க வேண்டும் என்று சிறுமியாக இருந்தபோதே முடிவு எடுத்தாராம்.

பின்னாளில் இவர், 'ரூம்பா' (Roomba) என்ற வீடு கூட்டும் ரோபோ, போர்க்களத்தில் கண்ணி வெடிகுண்டுகளை நீக்கும் ரோபோ போன்றவற்றை தயாரித்துப் புகழ் பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us