
படத்தில் இருக்கும் இந்தப் பறவையின் பெயர் அம்ப்ரல்லா பேர்டு (umbrella bird). தமிழில் பெயர் வைப்பது என்றால் குடைப்பறவை என்று சொல்லலாம். இதன் அறிவியல் பெயர் செஃபாலொப்டெரஸ் (Cephalopterus). இதன் தலை (கொண்டை) கறுப்புக் குடையை விரித்து வைத்தது போல் அழகாக தோற்றம் தருகிறது. இதன் கழுத்தில் தாடி போன்ற உறுப்பு வளர்ந்து தொங்குகிறது. இந்த தாடி 15 செ.மீட்டர் வரை வளரக்கூடியது. இது ஆங்கிலத்தில் வேட்டில்(wattle)என்று அழைக்கப்படுகிறது. உடல் முழுக்க கறுப்பும், கழுத்து மட்டும் அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட பறவையாகவும் இவைகள் காணப்படுகின்றன. பழங்கள், பூச்சிகள், பல்லி போன்ற சிறு உயிரிகள் இந்தப் பறவையின் உணவாகும். தென் அமெரிக்க மழைக்காடுகளில் இந்தப் பறவை காணப்படுகிறது.
அம்ப்ரல்லா பறவை காகத்தைப் போன்ற உருவம் கொண்டது. காடுகளில் உள்ள பழங்களை உண்டு இவை விதைகளைப் பரப்புவதால், காடுகள் வளரவும் காரணமாக இருக்கின்றன.