உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 15, 2016
அ நிறம் | அளவு
பிப். 10 - ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கால், சித்திரங்குடி, மேலச்செல்வனூர் - கீழச்செல்வனூர், சக்கரக்கோட்டை, காஞ்சிரங்குளம் ஆகிய 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகள் இனப்பெருக்கம், குஞ்சுகளை பொரிப்பதற்கான தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதற்காக, உள்நாடு மட்டுமின்றி சைப்ரஸ், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா போன்ற வெளிநாட்டுப் பறவைகளும் அதிகளவில் வருகின்றன. இந்த ஆண்டு கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 12, 13ல் நடக்கின்றன. இதில் வன அலுவலர் தலைமையில் 15 வனப் பணியாளர்களும், இரண்டு கல்லூரிப் பேராசிரியர்கள் தலைமையில் 20 மாணவர்களும், 8 பறவைகள் ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.
