உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 15, 2016

அ நிறம் | அளவு
பிப். 9 - 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும் பிராட்பேண்ட் வசதி செய்து தரவும், அரசு அலுவல்களை இணையதள நிர்வாகத்திற்கு மாற்றவும், மத்திய அரசு பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான கிராமங்களுக்கு, வயர்லெஸ் அல்லது பிராட்பேண்ட் வசதி இன்னும் தரப்படவில்லை. இதற்கு, ஃபைபர் இழை கொண்ட கம்பி வடங்கள் பதிப்பதில் சிக்கல் உள்ளது.
இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யும், நோக்கியா நிறுவனமும் இணைந்து, சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ், கிராமங்களுக்கு வயர்லெஸ் பிராட்பேண்ட் வசதி செய்துதர புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளன.
