PUBLISHED ON : ஆக 01, 2016

அ நிறம் | அளவு
லண்டனில், முல்லர் நினைவு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 19.89 வினாடியில் கடந்த, 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் உசைன் போல்ட் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். சமீபத்தில், தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட போல்ட், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. லண்டனில் தங்கம் வென்று, உடற்தகுதியை நிரூபித்து, ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக இருக்கிறார்.
