தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புத்தக விந்தை

புத்தக விந்தை

புத்தக விந்தை


PUBLISHED ON : டிச 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு புத்தகத்தில், ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏதாவது பத்து வரிக்குள் ஒரு வரியை தேர்ந்தெடுங்கள். அந்த வரியில் பத்து சொற்களுக்குள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எத்தனையாவது சொல் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

(a) பக்க எண்ணை இரண்டால் பெருக்குங்கள்

(b) விடையை ஐந்தால் பெருக்குங்கள்

(c) இருபதை கூட்டுங்கள்

(d) வரி எண்ணை கூட்டுங்கள்

(e) ஐந்தை கூட்டுங்கள்

(f) பத்தால் பெருக்குங்கள்

(g) சொல்லின் எண்ணை கூட்டுங்கள்.

உதாரணமாக, பக்க எண் 139, வரி எண் 7, சொல் எண் 9 என்று கொள்வோம்.

மேற்சொன்ன கணக்கீடுகள்படி கிடைப்பது: (a) 139 × 2 = 278; (b) 278 × 5 = 1390; (c) 1390 + 20 = 1410; (d) 1410 + 7 = 1417; (e) 1417 + 5 = 1422; (f) 1422 × 10 = 14220; (g) 14220 + 9 = 14229

இறுதி விடையான 14229ல் இருந்து 250ஐ கழித்தால் 13979 கிடைக்கும். பக்க எண் 139 வரி எண் 7, சொல் எண் 9. நாம் தேர்ந்தெடுத்த எண்கள்! உங்கள் நண்பர்களுடன் இதை விளையாடி மகிழலாம்.

- தி. தர்மராஜன்,

தேசியவிருது பெற்ற ஓய்வுபெற்ற கணித ஆசிரியர்,

கோவை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us