தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பிரும்மம்

பிரும்மம்

பிரும்மம்


PUBLISHED ON : நவ 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்ப் பெயர்: முருங்கை

ஆங்கிலப் பெயர்: டிரம் ஸ்டிக் (Drum stick)

தாவரவியல் பெயர்: மோரிங்க ஒலிஃபெரா (Moringa oleifera)

தாயகம்: இந்தியா

அளவு: 30 அடி உயரம் வரை வளரும்

வளர்வதற்கு ஏதுவான இடம்: வறண்ட பகுதி

சத்துகளின் சுரங்கமாகத் திகழும் காய்கறிகளில் முக்கியமானது முருங்கைக்காய். இமயமலையின் அடிவாரப் பகுதிகளே இதன் தாயகம். முருங்கை, மர வகையைச் சேர்ந்தது. பொதுவாக, அனைத்து வகை மண்ணிலும் வளரும். குறிப்பாக வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பமான பகுதிகளிலும் முருங்கை விளைகிறது.

மேற்கு வங்காளம், அசாம், தென்னிந்திய மாநிலங்களின் வீட்டுத் தோட்டங்களில் முருங்கை வளர்க்கப்படுகிறது. குச்சிபோல நீளமாகவும் அதன் உள்ளே விதைகளுடனும் காணப்படும் முருங்கைக்காயை வேக வைக்கும்பொழுது, அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதி வெந்து, உண்பதற்குச் சுவையாக மாறிவிடும்.

முருங்கைக்காயின் பயன்பாடு, ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. வங்காளத்தில் முருங்கைக்காயை 'பாஜா' என்கிற பொரியல் போன்ற உணவாகச் சமைக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் முருங்கைக்காய் சாம்பார் மிகவும் புகழ்பெற்றது. கூடவே, முருங்கைக்காய் புளிக்குழம்பு, முருங்கைக்காய் பிரட்டல் போன்ற உணவுகளைச் சமைப்பார்கள்.

கேரளத்தின் புகழ்பெற்ற உணவான அவியலில் முருங்கைக்காய்க்கு முக்கிய இடமுண்டு. வெட்ட வெட்ட வளரும் தன்மை முருங்கைக்கு உண்டு. இதனாலேயே இதற்கு, 'பிரும்மம்' என்ற பெயரும் உண்டு.

-- காரா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us