தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மக்களை இணைக்கும் கேக் மிக்ஸிங்!

மக்களை இணைக்கும் கேக் மிக்ஸிங்!

மக்களை இணைக்கும் கேக் மிக்ஸிங்!


PUBLISHED ON : டிச 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். கடைகளில், வீடுகளில் விதவிதமான கேக்குகள் தயாரிக்கப்படும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்த கேக் ஒரு முக்கிய பொருள்.

கிறிஸ்துமஸ் காலத்தின் தொடக்கமாக அமைவது 'கேக் மிக்ஸிங் செரிமனி'. உலக வரைப்படத்தில், நீங்கள் எங்கு விரல் வைத்தாலும், அங்கே நவம்பர் மாதமே 'கேக் மிக்ஸிங் செரிமனி' ஆரம்பித்திருக்கும். ஒற்றுமைக்கு வலிமை சேர்க்க உருவானதே இத்திருவிழா. இந்த விழாவில், கிலோ கணக்கில் கேக் தயாரிக்கப்படும். அதில் அனைவரும் பங்கேற்கலாம்.

பழைய கிறிஸ்தவ நடைமுறையில் இது ஒரு முக்கிய சடங்கு. இன்றும் பல நாடுகளில் கேக் மிக்ஸிங் செரிமனி இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை. முதன் முதலில், ஐரோப்பாவில் இந்த வழக்கம் தொடங்கப்பட்டதாகத் தகவல்.

அப்படியே பல நாடுகளுக்கு இந்தப் பழக்கம் பரவியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின், பல நாடுகளில் கிறிஸ்துமஸ் சமயத்தில் இதைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். உறவினர்கள், நண்பர்கள் என சிறிய வட்டத்திலேயே முதலில் அறிமுகமானது. பின்னர், அமெரிக்காவின் பிரபல நிறுவனமான பி. டஃப் அண்ட் சன்ஸ் (P.Duff and Sons) தான் இதை வணிகமயமாக்கியது என்று சொல்லப்படுகிறது. அதன் பின் சிறிய வட்டம் பெரிய வட்டமானது போல், வணிக முறை என்பதால் பலரும் பங்கெடுக்க முடிந்தது.

மக்கள் மத்தியில் கேக்குகளைப் பிரபலப்படுத்தும் முயற்சிதான், அந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம். அதனால் கேக் தயாரிப்பை எளிமைப்படுத்த, அதை பதப்படுத்தி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தார்கள்.

இங்கு தான் நாம் கவனமாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, கேக் மிக்ஸிங்கிற்குத் தேவையான பொருட்களைத் தான் அந்த நிறுவனம் சந்தைப்படுத்தியது. அதன் பின்னரே பேக்கிங் முறை தொடங்கும். இப்போதோ ஏராளமான தனியார் நிறுவனங்கள் கேக் பேகிங் பொருட்களை விற்பனை செய்கின்றன. ஆனால், அப்போது டஃப் நிறுவனம், கேக் மிக்சிங்கை எளிமைப்படுத்தவே ஆர்வம் கொண்டிருந்தது.

கேக் மிக்ஸிங் சுமார் 40 நாட்கள் நடைபெறும் நிகழ்வு. இதில் பல்வேறு பழச்சாறுகள், பிரெட்டுகள், கேக்குகள், உலர் கனிகள், வாசனைத் திரவியங்களைக் கலப்பார்கள். இதில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள். இதையடுத்து, அவை பேகிங் (Baking) செய்யப்படும்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய இரண்டும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகவும், விருப்பமாகவும் கொண்டு, விருந்தினர் அனைவருக்கும் இந்த கேக்கை பரிமாறுவார்கள். கேக் மிக்ஸிங் செரிமனி மக்களை இணைக்கும் ஒரு விழாவாகப் பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us