தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நொண்டிக்கோடு ஆடலாமா?

நொண்டிக்கோடு ஆடலாமா?

நொண்டிக்கோடு ஆடலாமா?


PUBLISHED ON : மே 22, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

01. நொண்டிக்கோடு விளையாட இரண்டு குழுக்கள் சம எண்ணிக்கையில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு பத்து பேர் இருந்தால், ஐந்து ஐந்தாக பிரிந்து கொள்ளுங்கள். உத்தி பிரித்தல் போன்ற முறை மூலம் குழுக்களை பிரித்துக் கொள்ளலாம்.

02. விளையாட்டுத் திடலிலோ, வீட்டு கார் பார்க்கிங்கிலோ, படத்தில் உள்ளது போல், ஒரு பெரிய வட்டம் வரைய வேண்டும். அதற்குள் ஓர் ஆள் நிற்கும் அளவுக்கு சிறிய வட்டம் வரைந்து கொள்ளவும். பெரிய வட்டம்தான் விளையாடுவதற்கான எல்லைக்கோடு. வட்டத்துக்குள்ளே முதலாவது குழுவும், வட்டத்துக்கு வெளியே இன்னொரு குழுவும் நின்றுகொள்ளவும்.

03. இப்போது ஆட்டத்தை தொடங்கலாம். வட்டத்துக்கு வெளியே நிற்கும் குழுவிலிருந்து, யாரேனும் ஒருவரை வட்டத்துக்குள் அனுப்ப வேண்டும். அவர் நொண்டியடித்த படியே வட்டத்துக்குள் சென்று, அங்கிருப்பவர்களை தொடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

04. இடது காலை ஊன்றியும், வலது காலையும் மடக்கியும் நொண்டியடித்து, வட்டத்துக்குள் இருப்பவர்களை அவுட் செய்ய துரத்த வேண்டும். அப்போது, ஓடுபவர்கள், துரத்துபவர்களின் கைகளுக்கு அகப்படாமல் அங்கும் இங்கும் ஓடுவார்கள். ஆனால், அவர்கள் வட்டத்தை தாண்டி வெளியே ஓடி விடக்கூடாது. மீறி வெளியேறினால் அவர் அவுட்.

05. சரி, துரத்துபவருக்கு கால் வலித்தால் என்ன செய்வது? வட்டத்துக்குள் போடப்பட்ட சிறிய வட்டத்துக்குள் போய் நின்று, இரண்டு காலையும் ஊன்றி ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மாறாக, துரத்துபவர் பேலன்ஸ் கிடைக்காமல் பெரிய வட்டத்துக்குள்ளேயே காலை ஊன்றி விட்டால், அவர் அவுட்டாகி விடுவார். அவர் வெளியேற, அடுத்தவரை வட்டத்துக்குள் அனுப்ப வேண்டும். அதேபோல், நொண்டி அடிப்பவர் துரத்தும்போது, ஓடுபவர் யாரேனும் எல்லைக் கோட்டை மிதித்தாலும் அவுட் தான்.

06. இப்படி வெளி வட்டத்துக்குள் நிற்போர் எல்லோரும் ஒவ்வொருவராக வந்து, வட்டத்துக்குள் நிற்போர் ஒருவர் விடாமல் துரத்திப்பிடித்து அவுட் ஆக்க வேண்டும். ஒருவேளை, இரண்டாவது குழுவினர் எல்லோரும் உள்ளே வந்தும், முதல் குழுவினரில் எல்லோரையும் அவுட் ஆக்க முடியவில்லை என்றால், முதல் குழுவினரே வெற்றிக்குழுவினர். எல்லோரையும் அவுட் ஆக்கிவிட்டால், இரண்டாவது குழுவினருக்கு வெற்றி.

- மு. கோபி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us