தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மே 22, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

மே 22, 1992 - பன்னாட்டு பல்லுயிர்ப் பெருக்க நாள்

பூமியில் வாழ மனிதர்களாகிய நமக்கு உரிமை இருப்பது போல, மற்ற விலங்கினங்களுக்கும், தாவர இனங்களுக்கும் உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மே 23, 1707 - கார்ல் லின்னேயஸ் பிறந்த நாள்

உயிரியலாளர், மருத்துவர். நவீன வகைப்பாட்டியலின் தந்தை. உயிரினங்களைப் பற்றி ஆய்வுசெய்த அறிவியலாளர். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர்முறைக்கும் அடிப்படையை உருவாக்கினார். தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மே 23, 2000 - உலக ஆமைகள் நாள்

பூமியில் பல மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருபவை ஆமைகள். ஊர்வன இனத்தைச் சேர்ந்த இவை, நீரிலும் நிலத்திலும் வாழும். உலகில் ஏறத்தாழ 300 வகை ஆமையினங்கள் உள்ளன. விரைவாக அழிந்து வருகிற ஆமை இனங்களைப் பாதுகாக்க, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மே 24, 1819 - விக்டோரியா மகாராணி பிறந்த நாள்

பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில், இவருடைய காலம் முக்கியமானது. மிக அதிக நாட்கள் ராணியாக இருந்துள்ளார். பிரிட்டிஷ் இந்தியாவின் பேரரசியாக 1876, மே 1 முதல் இறக்கும் வரை இருந்தார். 'ஐரோப்பாவின் பாட்டி' என்று அழைக்கப் பட்டார்.

மே 25 - சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்

இந்தியாவில் ஒவ்வோராண்டும் பல ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக, தேசியக் குற்றப்பதிவு ஆணையம் தெரிவிக்கிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு, அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us