தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெல்லக்கட்டி செல்லக்குட்டி

வெல்லக்கட்டி செல்லக்குட்டி

வெல்லக்கட்டி செல்லக்குட்டி


PUBLISHED ON : மே 02, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெல்லக்கட்டி, செல்லக்குட்டி என்று நம்மைக் கொஞ்சினால் நமக்குப் பிடிக்கும்தானே? வெல்லம் போல இனிப்பாகவும், எல்லோருக்கும் செல்லமாகவும் இருக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது? நமக்குப் பிடித்தமான இனிப்புகளில் ஒன்றான வெல்லம் எப்படி உருவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

சர்க்கரை தரும் கரும்பிலிருந்துதான் வெல்லமும் தயாரிக்கப்படுகிறது. பனையிலிருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்பு எப்படி வெல்லமாக உருமாறுகிறது என்று பார்க்கலாம்.

கரும்புச் சாறு ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் வெகுநேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. சுமார் 200 சென்டிகிரேடு கொதிநிலையில், கரும்புச் சாறில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்று இறுகுகிறது. கொதிநிலையில் உள்ள பாகு அச்சுகளில் ஊற்றி உலர வைக்கப்படுகிறது. அது இறுகியதும் நமக்கு வெல்லம் கிடைக்கிறது.

அச்சில் ஊற்றி செய்யப்படுகிற வெல்லம் 'அச்சு வெல்லம்' எனப்படுகிறது. பாகை கைகளால் உருட்டியும் வெல்லம் செய்கிறார்கள். இது 'மண்டை வெல்லம்' எனப்படும்.

பனையிலிருந்து எப்படி வெல்லம் செய்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்வோம்.

பனம் பாலைக் காய்ச்சி பாகு வடிவம் பெறப்படுகிறது. அதிலிருந்து பனை வெல்லமும், பனை சர்க்கரையும் கிடைக்கிறது.

முழுக்கச் சுத்தப்படுத்தப்படாத கெட்டியான கருநிற வெல்லம் 'கருப்பட்டி' எனப்படுகிறது. சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை 'பனங்கற்கண்டு' எனப்படும். பெரும்பாலான பனை வெல்லம் பேரீச்சை பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

கரும்பிலிருந்து பெறப்படும் வெல்லம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பலவகையான இனிப்புப் பண்டங்கள் வெல்லத்தால் செய்யப்படுகின்றன.

வெல்லத்தில், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' அதிகம் உள்ளது. வெல்லத்திற்கு செரிமான சக்தி அதிகம் உள்ளது. டீ, காபி போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லமும், கருப்பட்டியும் பயன்படுத்துகிறார்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், வெல்லம் சாப்பிட்டால் ஒரு தொல்லையும் இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us