தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சோழர் கால மைல் கல்

சோழர் கால மைல் கல்

சோழர் கால மைல் கல்


PUBLISHED ON : டிச 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

மைல் கற்கள், நமக்கொன்றும் புதியவை அல்ல. தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளில், அவற்றைப் பார்க்கலாம். எங்கிருந்து வருகிறோம், எங்கே செல்கிறோம் என்பதை நமக்கு எடுத்துச் சொல்ல, இதைவிட வசதியான கருவி உண்டா? அதே சமயம், நாம் பார்க்கும் மைல் கற்கள் அனைத்தும் ஆங்கிலம் அல்லது தமிழ் எழுத்துகளுடன் 1, 2, 3 என்று தான் இருக்கும். தமிழ் எண்களுடன் மைல் கற்களைப் பார்த்திருக்கிறீர்களா?

18ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்தில் காலூன்றிக் கொண்டிருந்தபோது, இங்கே மைல் கற்கள் இருந்தன. அவற்றில் தமிழ் எண்களும் இடம்பெற்றிருந்தன. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையில், இடப்பக்கம், கௌதமபுரி வண்டன் குளக்கரையில் உள்ள பழங்கால மைல் கல்தான் அது. பிரம்மதேசம், சோழர்காலம் முதலே மிக பிரசித்திபெற்ற ஊர்.

இக்கல்லில், மேலே அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் ஆகிய பெயர்கள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. உடன், I என்ற ரோமன் எண்ணும். கீழே, அதே ஊர்ப்பெயர்கள் தமிழில் உள்ளன. அவற்றின் கீழே, 'க' என்னும் எழுத்து. அதாவது 'க' என்றால் தமிழில் 'ஒன்று' என்று பொருள். பொதுவாக இந்து -அரபிக் எண்களே வழக்கில் இருக்கவேண்டிய இடத்தில், மைல் கற்களில் தமிழ் எண்கள் இடம்பெற்றிருந்தது பெருமைக்குரிய விஷயம்தானே?

- பவித்ரா ஸ்ரீனிவாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us