தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இசை துளிகள்!

இசை துளிகள்!

இசை துளிகள்!


PUBLISHED ON : டிச 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

இசைப் பேச்சு

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா, இந்த ஆண்டு மூன்று கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாடியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்புகளால் திரை இசை பற்றி மாணவர்கள் ஐயம் தீர்த்துக்கொண்டனர்; ஐயம் இல்லாதவர்கள் இசையின்பால் ஈர்க்கப்பட்டனர்.

வாழ்நாள் சாதனை!

ட்ரினிட்டி கலைவிழாவில் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றார் ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல். புல்லாங்குழல், கிளாரினெட், மாண்டலின், சாக்ஸபோன் ஆகிய கருவிகளுக்கும் தவில் வாசித்திருக்கிறார் இவர். இந்திய அரசின் 'சங்கீத நாடக அகாதெமி' விருதையும் பெற்றவர் இவர்.

சங்கீத சூடாமணி

'சங்கீத சூடாமணி' விருது இந்த ஆண்டு பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திரையிசைப் பாடகராக ஆவதற்கும் முன்பாக கர்நாடக இசை மேடைகளில் பெரும் வரவேற்போடு பாடிக்கொண்டிருந்தவர்தான் உன்னிகிருஷ்ணன். மூத்த இசை விமரிசகரான சுப்புடுவால் பலமுறை பாராட்டப் பெற்றவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us