sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

கால்களால் சுவாசிக்கும் உயிரினம்

/

கால்களால் சுவாசிக்கும் உயிரினம்

கால்களால் சுவாசிக்கும் உயிரினம்

கால்களால் சுவாசிக்கும் உயிரினம்


PUBLISHED ON : அக் 23, 2017

Google News

PUBLISHED ON : அக் 23, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நண்டு (Crab)

உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள், வயல்வெளிகள், கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் நில, நீர் வாழ் உயிரினம் நண்டு. மிகச் சிறியது முதல் பெரிய அளவு வரை, பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நண்டுகள், நன்னீர் நிலைகளிலும் காணப்படுகின்றன. சில மில்லி மீட்டர் அளவே உடைய 'பீ' (Pea) நண்டு முதல், அளவில் மிகப்பெரிய ஜப்பானிய சிலந்தி நண்டு (Japanese Spider Crab) வரை, பல நண்டு வகைகள் உள்ளன.

இரண்டு கூட்டுக்கண்களும், முதுகில் தட்டையான ஓடும், ஐந்து ஜோடிக் கால்களும் கொண்டவை. முன்புறம் உள்ள இரண்டு கால்கள் இரையைப் பற்றிக்கொள்ள உதவும். மீதம் உள்ள நான்கு ஜோடி கால்களும், பக்க வாட்டில் வேகமாய் நகரப் பயன்படும். கால்களின் மேற்பகுதியில் உள்ள செதில்களால் இவை சுவாசிக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை இவற்றின் முதுகுப்புறத்தில் உள்ள மேல் ஓடு கழன்று புதுப்பித்துக் கொள்ளும். ஆண் நண்டுகளைவிட, பெண் நண்டுகளுக்கு, அகலமான வயிற்றுப் பகுதி காணப்படும். வயிற்றின் கீழேயே முட்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவாக அதன் உடல் அமைப்பு அமைந்துள்ளது. நண்டில் பலவகையான சத்துகள் இருப்பதால், உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படும் கடல் உணவாக இது உள்ளது.

பீ நண்டு (Pea Crab)

உயிரியல் பெயர்: 'பின்னோதெரா ஃபாபா'(Pinnothera Faba)

உலகின் மிகச்சிறிய நண்டு இதுதான். ஒரு பட்டாணி அளவே இருக்கும். சிப்பி, சங்கு போன்ற கடல் வாழ் மிதவை உயிரினங்களில் ஒட்டியபடி இவை வாழ்கின்றன. நியூசிலாந்து கடற்பகுதிகளில் இவை வாழ்கின்றன.

ஜப்பானிய சிலந்தி நண்டு (Japanese Spider Crab)

உயிரியல் பெயர்: 'மேக்ரோசெய்ரா கேயம்ப்ஃபெரி| (Macrocheira Kaempferi)

நீளமான கொடுக்குகளுடன், பிரம்மாண்டமாகக் காணப்படும் இவைதான் உலகிலேயே மிகப்பெரிய நண்டுகள். கணுக்காலி தொகுதி விலங்குகளில் மிக நீளமான கால்களைக் கொண்டவை இவை. 100 ஆண்டுகள் வரை வாழும். சுமார் 20 கிலோ வரை எடையும், 4 மீட்டர் நீளத்திற்கு கால்களும் உடைய இவை, ஜப்பானின் தெற்கு கடற்கரை ஓரங்களில் 2,000 அடி ஆழம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

- அ.ஆனந்தி






      Dinamalar
      Follow us