தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடற்கரைவாசி!

கடற்கரைவாசி!

கடற்கரைவாசி!


PUBLISHED ON : நவ 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்ப் பெயர்: கல்புரட்டி உள்ளான்

ஆங்கிலப் பெயர்: டர்ன்ஸ்டோன் (Turnstone)

அறிவியல் பெயர்: அரினாரியா இன்டர்பிரஸ் (Arenaria interpres)

பருமன் : மைனா

அளவு : 20 முதல் 25 செ.மீ. நீளம்

எடை : 110 முதல் 130 கிராம்

வாழிடம் : கடற்கரைப் பகுதிகள்

கடற்கரைப் பகுதிகளை ஒட்டி, பல உயிரினங்கள் வாழும். நத்தைகள், நண்டுகள், ஆமைகள் போலவே பறவைகளும் வாழ்வது உண்டு. நம்மூருக்கு குளிர்காலங்களில் பலவகையான பறவைகள் வலசை வருவது உண்டு. அதில் ஒன்றுதான், கல்புரட்டி உள்ளான்.

இது குளிர்காலத்தில் தமிழகத்திற்கு வலசை வரும். இந்தப் பறவைக்கு, மணல் புளோவரைப் போல் குட்டையான கால்கள் இருக்கும். இதனுடைய கழுத்தும் பருமனாக, குட்டையாகக் காணப்படும். அதேசமயம் இதன் அலகு உருண்டையாக நேராக இருக்கும். வயிற்றுப் பகுதி வெண்மையாகவும், முதுகுப் பகுதி பழுப்பு நிறத்திலும் காணப்படும். இதனுடைய கால்கள் காவி நிறத்தில் இருக்கும்.

இந்த வகைப் பறவைகளை உவர் நிலங்கள், கடலோரப் பகுதிகளில் காண முடியும். கடலோரப் பகுதிகளில், உருண்டையாக சிறிய அளவிலான இந்தப் பறவை ஓடி ஓடிச் செல்லும். அங்கிருக்கும் உலர்ந்த பாசிகளை தன்னுடைய அலகினால் புரட்டி, அதில் மறைந்து இருக்கும் உணவை உண்ணும். தண்ணீரில் விளையாடும். மணலுக்குள் இருக்கும் பூச்சிகளை, மறைந்திருக்கும் உயிரினங்களை கூர்மையான அலகினால் கொத்தி உண்ணும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us