தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சின்னப் பூச்சி பெரிய ஆபத்து!

சின்னப் பூச்சி பெரிய ஆபத்து!

சின்னப் பூச்சி பெரிய ஆபத்து!


PUBLISHED ON : ஜூன் 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பருவமழை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாகத் தாக்கும். பொதுவாக, நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகின்றன. டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய், கடுமையாகப் பாதிக்கும்.

டெங்கு காய்ச்சல் (Dengue Fever)

ஏடிஸ் ஏஜிப்டி (Aedes Aegypti) என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

DENV I,II,III,IV என நான்கு வகை வைரஸ்கள் மூலம் பரவுகிறது.

திறந்தவெளிகளில் தேங்கியிருக்கும் கழிவு நீர், பாசனக் கால்வாய் பகுதிகள், குட்டைகள் ஆகிய பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் அதிகம் முட்டையிடுகின்றன.

நோய் அறிகுறிகள்: திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு உடல் உஷ்ணம் அதிகரித்தல், தசை வலி, மூட்டுகளில் வலி, தலைவலி, சருமத்தில் கட்டிகள், வெடிப்புகள். நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவத் தொடங்கும்.

'த்ராம்போசைட்டோபீனியா' (Thrombocytopenia) : டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (Platelets) எண்ணிக்கை குறைவாகக் காணப்படும்.

நோய்க் கணிப்பு: 'லியூகோசைட்ஸ்' (Leucocytes) எனப்படும் ரத்த வெள்ளை அணுக்களின் மொத்த அளவைப் பரிசோதனை செய்தல்.

'ஏடிஸ் ஏஜிப்டி' கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, மற்றும் அமெரிக்க வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது.

'ஆன்ட்டி-பாடி' (Antibody) : டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் எதிர் உயிரி.இந்த எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும்.

4500 - 11000 mcL (Microliter)சாதாரணமாக ஒரு மைக்ரோலிட்டர் ரத்தத்தில் இருக்க வேண்டிய ரத்த வெள்ளை அணுக்களின் அளவு. இது எவ்வளவு குறைந்துள்ளது என்பதை அறிந்து டெங்குவின் பாதிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

சிகிச்சை: உடல் உஷ்ணத்தைத் குறைக்கும் திரவ வகை உணவுகளும், ஓய்வும் டெங்கு காய்ச்சலைக் குறைக்கும். ரத்த வட்டுகளின் (Platelets) அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இறங்கும்போது புதிய ரத்தம் ஏற்றப்பட வேண்டியது அவசியம்.

1/3 உலகம் முழுவதும் உள்ள மக்களில் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள்

400 மில்லியன் ஒரு வருடத்தில் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள்

5 லட்சம் DHF (Dengue Hemorraghic Fever) பாதிப்பு ஏற்படுகிறவர்கள்

22,000 ஓர் ஆண்டில் டெங்குவினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை

2.5 மில்லியன் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளில் வாழ்கிற மக்கள்.

உலக அளவில் ஓர் ஆண்டில் டெங்கு பாதிப்பு 50-100 மில்லியன் - பாதிக்கப்படுவோர்

காய்ச்சல் பருவம்:

தலைவலி

வாய், மூக்கில் ரத்தம்

தசை மூட்டு வலி

வாந்தி

கடுமையான பருவம்

குறைவான ரத்த அழுத்தம்

வயிற்றில் நீர்க் கோர்ப்பு

மீள்நிலைப் பருவம்

மாறுபட்ட சுய உணர்வு

வலிப்பு

சொறி

குறைவான இதயத்துடிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

* தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

* மழை நீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

* வசிப்பிடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நீரை நன்றாகக் காய்ச்சி வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.

* பாதுகாப்பான கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை

நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்புச் சாறுகளை காலை, மாலை இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் நிலவேம்புப் பொடி கிடைக்கும்.

அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவப் பிரிவு, தமிழ்நாடு அரசின் டாம்ப்கால், ஆகிய இடங்களில் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us