தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மரபணுவில் இருக்கும் காபி,டீ!

மரபணுவில் இருக்கும் காபி,டீ!

மரபணுவில் இருக்கும் காபி,டீ!


PUBLISHED ON : டிச 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீங்கள் காபி பிரியரா, தேநீர் பிரியரா? என்பதை உங்களது மரபணு மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

சிலருக்குக் காபி என்றாலே உயிர். காபியின் மெல்லிய கசப்புச் சுவை நாக்கில் பட்டால்தான் பலருக்கு அன்றைய நாளே விடியும். வேறு சிலருக்கோ, காபியின் வாசனையை நுகர்ந்தாலே குமட்டல் ஏற்பட்டுவிடும். அவர்களுக்கு, காபி ஒரு கசப்புத் திரவம். இப்படி ஒரே பானத்தை சிலர் விரும்புவதும், வேறு சிலர் வெறுப்பதும் பழக்கத்தினால் வருவது அல்ல; அவரவர் இயல்பிலேயே, அதாவது மரபணுவிலேயே ஒளிந்து கிடக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஏன் முரண்?

கசப்பான உணவு வகைகளை சிலர் ஒதுக்கிவிடுவார்கள். சிலர் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் உண்பார்கள். இப்படிப்பட்ட முரண் ஏன்? சுவையில் இருக்கும் உயிரியல் கூறுகளே இதற்குக் காரணம். அதைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து, இந்த ஆய்வை மேற்கொண்டனர். இங்கிலாந்திலுள்ள பயோபாங்க் (Biobank) ஆய்வு நிலையத்தில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 37 முதல் 73 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றனர்.

வேதிப்பொருள் செய்யும் மாயம்

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், காபியை, தேநீரை எவ்வளவு குடிக்கிறார்கள்? எப்படிக் குடிகிறார்கள்? ஏன் குடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகப்பட்டது. காபியில் இருக்கக்கூடிய 'கேஃபைன்' (Caffeine) என்கிற வேதிப்பொருளை ஏற்றுக்கொள்கிற மரபணுக்களைக் கொண்ட மனிதர்கள், ஒரு நாளைக்கு நான்கு கோப்பைகளுக்கு மேல் காபி குடித்தார்கள்.

அவர்களுக்குத் தேநீர் அருந்தும் பழக்கம் மிகக் குறைவாக இருந்தது.

காபியில் இருக்கும் கேஃபைன் என்கிற கசப்புச் சுவை மட்டுமல்ல, வெவ்வேறு விதமான கசப்புச் சுவைகளை உடலின் சில குறிப்பிட்ட மரபணுக்கள் ஏற்றுக்கொள்ளும். காபியில் இருக்கும் வேதிப்பொருள் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

தேநீர் குடிப்பவர்களுக்கு, காபி கொடுத்தபோது, அவர்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படவில்லை. கசப்பான தன்மைதான் வெளிப்பட்டது.

இதற்குக் காரணம், புரோபில் தையோயுராசில் (propyl thiouracil - PROP) என்கிற கசப்பான சுவை கொண்ட வேதிப்பொருளை சில குறிப்பிட்ட மரபணுக்கள் ஏற்றுக்கொள்ளும். அவர்களுடைய சுவை மரபணுவில், கசப்பை ஏற்றுக் கொள்ளும் தன்மை அதிகம் இருக்கும். சிலருக்கு அதை ஏற்றுக்கொள்ளாதவாறு வடிவமைக்கப்பட்டு இருக்கும். காபியா, தேனீரா என்பதை மரபணு தீர்மானிக்கிறது என்பதை உறுதிப்படுத்தினாலும், அதுகுறித்து இன்னும் விரிவான ஆய்வுகளைச் செய்யவுள்ளனர்.

- கவிதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us