தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முரட்டுக்குணம் வாய்ந்த மலைத்தேனீ!

முரட்டுக்குணம் வாய்ந்த மலைத்தேனீ!

முரட்டுக்குணம் வாய்ந்த மலைத்தேனீ!


PUBLISHED ON : டிச 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. மலைத் தேனீ (அபீஸ் டார்சிதா - Apis dorsata)

2. சிறிய அல்லது பூத் தேனீ (அபிஸ் ஃப்லோரியா - Apis florae)

3. ஆசிய தேனீ (அபீஸ் கரானா - Apis cerana)

4. ஐரோப்பிய தேனீ (அபீஸ் மெலிஃபெரா - Apis mellifera)

5. கொசுத் தேனீ (டாமர் பீஸ் - Dammer bees)

என்று இந்தியாவில் ஐந்து வகையான தேனீக்கள் காணப்படுகின்றன. இவற்றில், கொசு தேனீ, கொடுக்கில்லா தேனீ என்றும் அறியப்படுகிறது. கொசு தேனீக்களை வளர்ப்பது எளிது.

முரட்டு குணம்

மலைத் தேனீயைத் தவிர, மற்றவை பெரும்பாலும் மரங்களின் உயர்ந்த கிளைகளில் கூடு கட்டும். மலைத் தேனீ பாறை இடுக்குகளில் கூடு கட்டும். இவை பழக்குவதற்குக் கடினமானவை, முரட்டுத்தனமான குணம் உடையவை, உருவிலும் பெரிதானவை. அதனால் மற்ற தேனீக்களைப்போல தோட்டங்களிலோ பண்ணைகளிலோ மலைத்தேனீக்களை வளர்க்க இயலாது.

கூடு கட்டும் மரங்கள்

தமிழகக் காடுகளில், பொதுவாக தேனீக்களால் கூடு கட்டப்படும் மரங்கள்

கடுக்காய் (Terminalia chebula)

இலவு (Bombax malabaricum)

தனி (Terminalia bellerica)

வெள்ளமருது (Terminalia arjuna)

மா (Mangifera indica)

தேனீக்கள் ஈரப்பதமான இடங்களை அதிகம் விரும்பும்.

தேனீ கூட்டில் தேன் எங்கு இருக்கும்?

தேன் இருக்கும் பகுதி பெரும்பாலும் மேற்புறமே இருக்கும். அதாவது மரக்கிளையின் அடிப்புறத்தை ஒட்டியே இருக்கும். அதே போல் பாறையின் அடிப்புறத்தை ஒட்டியே மலைத் தேனீயின் கூட்டில் தேன் காணப்படும். பெரிய கூடுகள் என்றால் இடையில் ஒரு தடுப்பு (Midrib) போன்ற அமைப்பு காணப்படும். ஏனெனில் கூட்டின் கனத்தைத் தாங்கக்கூடிய தன்மை இருக்க வேண்டும் என்பதே காரணம். மலைத் தேனீயின் கூட்டில் 35 கிலோ தேன் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

அழிந்து வரும் தேனீக்கள்

தேனீக்களின் அழிவுக்குப் பெரும்பாலான பங்கு பூச்சிகொல்லிகளுக்குத்தான் உண்டு. மரபணு மாற்றப்பட்ட தாவரங்களில் இருக்கும் தேன், தேனீக்களுக்கு வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதன் பின் விளைவுகளால் தேனீக்கள் சில நேரங்களில் இறக்கின்றன.

தேனீ எனும் நண்பன்

தேனீக்கள்தான் தென்னை, வாழை, ஆப்பிள், பீச், காபி, ஏலக்காய், பருத்தி போன்ற பல வகை உணவுத் தாவரங்களின் மகரந்த சேர்க்கையாளர்கள். இதிலிருந்து தேனீக்களின் அவசியத்தையும், இயற்கையில் அவற்றின் சிறப்பான பங்கையும் உணர்ந்து தேனீக்களைப் பாதுகாக்க வேண்டும்.

- சு.சந்திரகேகரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us