தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கோலாகலக் கோலா

கோலாகலக் கோலா

கோலாகலக் கோலா


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்ப்பதற்கு பொம்மை போல மிக அழகாக இருக்கிற இதன் பெயர் கோலா (Koala) ஆஸ்திரேலியாவில் மட்டுமே இவை காணப்படும்.

அறிவியல் பெயர்: பாஸ்கோலார்டோஸ் சினிரியூஸ் (Phascolarctos cinereus)

குடும்பம்: மார்சுபியல்;! (Marsupials)

இனம்: பாலூட்டி (Mammals)

வாழ்நாள்: 13 - 18 வருடங்கள்

எடை: 15 கிலோவரை

உணவுப் பழக்கம்: தாவர உண்ணி

நீளம்: 90 சென்டி மீட்டர்

நிறம்: உடல் சாம்பல் நிறம் மார்புப் பகுதி வெண்மை நிறம்

கோலா குட்டி 'ஜோயி' (Joey) என்று அழைக்கப்படும்.

முதல் ஆறு மாதங்களுக்கு தாயின் வயிற்றின் முன் பகுதியில் உள்ள பை போன்ற பகுதியில் இருக்கும்.

நீளம் (சென்டி மீட்டர்)

140 கங்காரு

100 வோம்பட்

90 கோலா

* ஒரு நாளில் 18 முதல் 20 மணி நேரம் வரை உறங்கும்.

* பாலூட்டி இனத்தில் அதிக நேரம் உறங்கக்கூடிய இனம் கோலாதான்.

* கோலா, யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணும். யூகலிப்டஸ் மரங்களில் 600 வகைகள் உள்ளன. இதில் 10% வகை யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே கோலா உண்ணும். வளர்ந்த கோலா, அதிகபட்சமாக ஒரு கிலோ இலையையும் சராசரியாக 400 கிராம் இலையையும் ஒரு நாளில் 5 அல்லது 6 தடவையாகச் சாப்பிடும்.

* கோலா தனக்குத் தேவையான தண்ணீரை, தான் உண்ணும் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளிலிருந்தே பெற்றுக்கொள்கிறது. பெண் கோலாவுக்கு யூகலிப்டஸ் இலையிலிருந்து கிடைக்கும் தண்ணீரே போதுமானது. பெரிய ஆண் கோலா, மரப் பொந்துகளில் இருக்கும் நீரையும், தரையில் இறங்கி வந்து, கிடைக்கும் நீரையும் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்.

* கோலா, கோடைக்காலத்தில் தாழ்ந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டு ஓய்வு எடுக்கும். வேறு மரத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே மரத்தைவிட்டுக் கீழே இறங்கும்.

* ஆஸ்திரேலியாவில் மிருகக்காட்சி சாலைகளில் காணப்படும் கோலாக்கள் பால், தேநீர், ரொட்டி முதலியவற்றைச் சாப்பிடுகின்றன.

* கங்காருவைப் போலவே கோலாவும் ஆஸ்திரேலியாவின் முக்கியமான ஓர் அடையாளச் சின்னம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us