தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கணினி மொழி: அறிமுகமாகச் சில வார்த்தைகள்

கணினி மொழி: அறிமுகமாகச் சில வார்த்தைகள்

கணினி மொழி: அறிமுகமாகச் சில வார்த்தைகள்


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்ப்யூட்டருக்கு எழுதவும் தெரியாது, பேசவும் தெரியாது. அப்புறம் எப்படி நாம் தட்டச்சு செய்வதை திரையில் எழுதுகிறது. யாரோ பேசி நடித்த காணொளியை நமக்குப் பேசிக் காட்டுகிறது. அப்படியென்றால் கணினிக்கு எழுதவும், பேசவும் தெரியும்தானே!

இப்படி எல்லாவற்றையும் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் கணினியின் மொழி எதுவாக இருக்கும்?

கணினியைக் கண்டறிந்தவர்கள் ஆங்கில நாட்டவர்கள் என்பதால், அதனுடைய மொழி ஆங்கிலம் என நினைத்தால் தவறு! அப்படியென்றால் கணினிக்குத் தமிழ் தெரியுமா?

ஆங்கிலம், தமிழ் மட்டுமல்ல. எந்த மனித மொழியையும் கணினி புரிந்து கொள்ளாது. அது இயந்திரம் என்பதால், இரண்டு இலக்கங்கள் (0, 1) கொண்ட இலக்க மொழி (Machine Language) மட்டுமே புரியும்.

ஒரு மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஓர் எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இதற்கு, குறியீட்டு முறை (Character Encoding) என்று பெயர்.

கணினியின் கட்டளை மொழிகளை, நிரல் ஏற்பு மொழி (Programming language) என்கிறார்கள். சிறிய செயல் முதல் ஓர் எந்திர (Robot) மனிதனின் செயல் வரை நிர்ணயம் செய்வது கணினி மொழிகள்தான். இதை உருவாக்குபவர்களை மென்பொறியாளர்கள் (software engineer) என்கிறோம்.

மொழிகளின் வரிசை:

1) முதலாம் தலைமுறை - இயந்திர மொழி (Machine level language) பைனரி (Binary) : 0, 1

2) இரண்டாம் தலைமுறை - ஒருங்கிணைந்த மொழி (Assembly level language) நிமோனிக்ஸ் (Mnemonics) எனப்படும் இதனைச் செயல்படுத்த கட்டளைகள் எல்லாம் 0,1 ஆக மாற்றப்படும்.

3) மூன்றாம் தலைமுறை - உயர்நிலை மொழி (Highlevel language)

ஆங்கில மொழியின் கட்டளைகளையும் குறியீடுகளையும் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு நிரல் மொழி.

ஜாவா (Java),

சி (C), சி++ (C++)

பி.ஹெச்.பி (PHP)

வி.பி. (Visual Basic)

சி# (C#)

பெர்ல் (Perl)

ரூபி (Ruby)

ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script)

பைத்தான் (Python)

போன்றவை இப்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள கணினி மொழிகள். இவை இல்லாமல் கணினி இல்லை என்ற நிலை இருப்பதால்தான் மென்பொருள் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.

இந்த அறிமுகத்தை ஓரளவு புரிந்துகொண்டிருப்பீர்கள். போதும். பின்னால் உதவும்!

* ஆங்கில மொழிக்கு, ஆஸ்கி - ASCII (American Standard Code For Information Interchange) அல்லது ஆன்ஸி - ANSI (American National Standards Institute) என்ற குறியீட்டு முறையை பயன்படுத்துகிறார்கள்.

* இந்திய மொழிகள் அனைத்திற்கும் பொதுவாக இந்திய நியமக் குறியீட்டு முறை சுருக்கமாக 'இஸ்கி' - ISCII (Indian Standard Code for Information Interchange) என்ற குறியீட்டு முறை.

* தமிழ் நியமக் குறியீட்டு முறை 'திஸ்கி' (TSCII - Tamil Standard Code for Information Interchange)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us