தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒருமுகப்படுத்தும் நூத்தாங்குச்சி

ஒருமுகப்படுத்தும் நூத்தாங்குச்சி

ஒருமுகப்படுத்தும் நூத்தாங்குச்சி


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிக எளிமையான உபகரணங்களைக் கொண்டு விளையாடும் ஆட்டம் இது. குறைந்தது இரண்டு பேர் விளையாடலாம்.

தேவையான பொருட்கள்:

தென்னை ஈர்க்குச்சிகளை சுமார் 10 - -12 செ.மீ. அளவுள்ள சிறு சிறு குச்சிகளாக, 10 குச்சிகள் வெட்டிக் கொள்ள வேண்டும்.

இவற்றைவிட சற்றுப் பெரியதாக (சுமார் 15 செ.மீ.) ஒரு குச்சியையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.

மொத்தம் 11 குச்சிகள்.

சிறிய குச்சிக்கு 10 புள்ளிகள். பெரிய குச்சிக்கு 100 புள்ளிகள்.

சிறிய குச்சிகளை கற்றையாகப் பிடித்துக் கொண்டு, பெரிய குச்சியை அதன் நடுவில் குறுக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

குச்சிகளை தரையில் வீசிப் போட வேண்டும். சிதறிக் கிடக்கும் குச்சிகளில், தனியாகக் கிடக்கும் சிறிய குச்சியை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும்போது, மற்ற குச்சிகள் சிறிதுகூட அலுங்க/அசையக் கூடாது.

இப்படி ஒவ்வொரு குச்சியாக, மிக கவனமாக எடுக்க வேண்டும். மற்ற குச்சிகளை எடுக்க, கையில் இருக்கும் சிறிய குச்சியைப் பயன்படுத்தலாம். சில சமயம் 2 குச்சிகளைப் பயன்படுத்தி, ஒரு குச்சியை எடுக்க வேண்டி வரலாம்.

எந்தக் குச்சியையாவது எடுக்கும்போது, அலுங்கி விட்டால், அத்தோடு அந்த ஆட்டம் முடிந்தது.

கையில் இருக்கும் குச்சிகளின் புள்ளிகளை எண்ணிக் கணக்கிட வேண்டும்.

தொடர்ந்து அடுத்தவர் ஆட வேண்டும். ஆயிரம் அல்லது 1,500 என்பன போன்ற இலக்குகளை வைத்துக் கொண்டு ஆட வேண்டும். ஒவ்வொருமுறையும் சேர்க்கப்படும் புள்ளிகளைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

யார் முதலில் இலக்கை எட்டுகிறார்களோ, அவர் வெற்றி பெற்றவர்.

விதி:

பெரிய குச்சியின்மேல் ஒரு சிறிய குச்சியாவது தொட்டுக் கொண்டோ, அதன் மீதோ இருக்க வேண்டும். அப்போதுதான் ஆட்டத்தைத் தொடர முடியும். இல்லாவிட்டால், குச்சிகளை வெகு வேகமாக வீசி, எல்லாவற்றையும் மிகப்பரவலாகக் கிடக்கச் செய்து, எளிதில் எடுத்து விடமுடியும் அல்லவா? எனவேதான், பெரிய குச்சி மீது, ஒரு சிறிய குச்சியாவது இருக்க வேண்டும். வீசும்போது, பெரிய குச்சிமீது வேறு குச்சி இல்லாவிட்டால், அவருக்கு அந்த வாய்ப்பு முடிந்து விட்டது. அடுத்த சுற்றில்தான் மீண்டும் விளையாட முடியும். ஒரே சுற்றில் 200 முழுப்புள்ளிகளையும் எடுத்துவிட்டால், 20 அல்லது குறிப்பிட்ட அளவு புள்ளிகளை போனஸாகப் பெறலாம்.

கவனத்தை ஒரே இடத்தில் குவிக்க, இந்த விளையாட்டு உதவும். மனதை ஒருமுகப்படுத்தும் இந்த விளையாட்டை, நீண்டநேரம் விளையடலாம்.

- சபரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us