sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 5, 1972 - உலக சுற்றுச்சூழல் நாள்

மனித நடவடிக்கைகளால், இயற்கைக்குப் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. சுத்தம், சுகாதாரத்துடன் வாழவும், சுற்றுச்சூழல் பிரச்னைகளை மக்களிடம் எடுத்துக் கூறவும், இந்த நாள் ஐ.நா. சபையால் அனுசரிக்கப்படுகிறது.

ஜூன் 7, 1974 - மகேஷ் பூபதி பிறந்த நாள்

இந்திய டென்னிஸ் வீரர். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவர். லியாண்டர் பயஸ், சானியா மிர்சாவுடன் இணைந்து, பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் பட்டங்களை வென்றிருக்கிறார்.

ஜூன் 8, 1992 - உலக பெருங்கடல் நாள்

பூமியில் நாம் வாழ்வதற்கு, கடல் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பால், கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 9, 1781 - ஜார்ஜ் ஸ்டீபன்சன் பிறந்த நாள்

'ரயில் பாதைகளின் தந்தை' என்று போற்றப்படும் இங்கிலாந்து பொறியாளர். பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை முதன்முதலில் அமைத்தார். இவரது மகத்தான கண்டுபிடிப்பால், மாபெரும் தொழிற்புரட்சி ஏற்பட்டது.

ஜூன் 9, 1945 - கிரண்பேடி, பிறந்த நாள்

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. சர்வதேச அளவில் புகழ் பெற்றார். ஐ.நா. சபையின் சிவிலியன் போலீஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மக்கள் மேம்பாடுகளுக்காக, இந்தியா விஷன், நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார். தற்போது, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறார்.

ஜூன் 11, 1935 - எஃப்.எம். வானொலி ஒலித்த நாள்

பழைய வானொலியில் அதிகமான இரைச்சல் இருந்தது. அதைக் குறைத்து, எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகம் ஆனது. இதை எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற அமெரிக்கர் கண்டுபிடித்தார். பொதுமக்களுக்காக எஃப்.எம். முதன்முதலாக நியூஜெர்ஸி மாநிலத்தில் ஒலித்த நாள்.






      Dinamalar
      Follow us