
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 2ஆவது டெஸ்ட் செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 498/9 ('டிக்ளேர்') ரன்கள் எடுத்தது. இதில் இரண்டு இன்னிங்ஸிலும் ஏமாற்றிய இலங்கை அணி 9 விக்கெட்டில் வீழ்ந்து தொடரை இழந்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன் எடுத்த போது, இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், குறைந்த வயதில் (31 வயது, 175 நாள்) டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை (226 இன்னிங்ஸ்) எடுத்துச் சாதித்தார். இதற்கு முன், 'ஜாம்பவான்' சச்சின், 31 வயது, 326 நாளில் இந்த இலக்கை (195 இன்னிங்ஸ்) எட்டியிருந்தார்.

