உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 06, 2016

அ நிறம் | அளவு
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 'பாட் யங் துரோவர்ஸ் கிளாசிக்' தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் பெண்களுக்கான வட்டு எறிதலில் பங்கேற்ற இந்தியாவின் சீமா புனியா 62.62 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற 61.00 மீ. தேவை என்ற இலக்கை எட்டிய சீமா புனியா, ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். இப்போட்டியில் பங்கேற்கும் 19ஆவது இந்திய தடகள நட்சத்திரம் இவர்தான்.
