PUBLISHED ON : டிச 09, 2019

சாதனை : சுகாதாரம்
“கிராமத்தின் நுழைவாயிலில் 5 நிமிடம் கூட நிக்கமுடியாம நாற்றமடிக்கும். அதுக்கு பயந்து நாங்களெல்லாம் ஓடியிருக்கோம். அந்த ஓட்டம்தான் என்னை தலைவர் பதவிக்கு வரவைச்சு, என் கிராமத்தோட சுகாதாரத்துக்கான வேலையை செய்ய வைச்சதுன்னு நினைக்கிறேன்.” என்கிறார் திண்டுக்கல் மாவட்டம் ஆலமரத்துப்பட்டியின் முன்னாள் கிராம ஊராட்சித் தலைவர் ராஜலட்சுமி.
-“ஒவ்வொரு தலைவரும், ஒவ்வொரு வேலைக்கு முன்னுரிமை கொடுப்பாங்க. எங்க ஊர், சுகாதாரத்துல முன்மாதிரியா இருக்கணும்னு நான் நினைச்சேன். அதுக்கு திறந்தவெளியில மலம் கழிக்கிறதை நிறுத்தறதுதான் ஒரே வழி. அதுக்கு என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதை செய்யத் தொடங்கினேன். மக்கள் வெளிப்படையா கழிப்பறையைப் பத்தி பேச தயங்கினப்ப, அவங்கிட்ட இருந்த கூச்சத்தைப் போக்கினேன்.
திறந்தவெளியில மலம் கழிப்பது பாதுகாப்பு இல்லாததது என்பதை உணர்த்தினேன். அதனால, இங்கேயுள்ள பெண்களே, கழிப்பறை கட்டச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டு வராங்க.
நான் தலைவரா இருந்து என்ன செஞ்சேன்னு ஒரே வரியில சொல்லணும்ன்னா, என்னைப்போல பல துணிச்சலான பெண்களை உருவாக்கி இருக்கேன். இதுவே என்னோட பெரிய சாதனை” என்று பெருமிதத்துடன் கூறினார் ராஜலட்சுமி.
