PUBLISHED ON : டிச 09, 2019

சாதனை : நீர் மேலாண்மை
திருச்சி மாவட்டம், லால்குடி தாலூகா, புள்ளம்பாடி ஒன்றிய சேர்மன் ஆகப் பணியாற்றியவர் என். ஜெயபிரகாஷ். 2006- 2011 ஆகிய ஐந்தாண்டுகளில் புள்ளம்பாடி ஒன்றியக் கிராமப் பொதுமக்களுக்கு தனது பணியைச் செவ்வனே செய்திருக்கும் மன நிறைவைத் தான் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்.
“புள்ளம்பாடி ஒன்றியம்ங்கறது முப்பத்தி மூணு கிராமப் பஞ்சாயத்து, அதுல பதினைஞ்சு ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்களை உள்ளடக்கியது.
இங்கே 'நீர் மேலாண்மை' முயற்சிகளை நானும் கையில எடுத்துகிட்டேன். ஊட்டத்தூர், அதுக்கு முன்னாடி பத்துப் பதினைஞ்சு ஊர்ல தண்ணீர்ப் பற்றாக்குறை. அதனால வறட்சி நிவாரண நிதி பெற்று, விவசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்துத் தர்றது, மின்சார மோட்டார் தர்றதுன்னு செஞ்சோம். கிராமப் பொதுமக்களோட குடிநீர்த் தேவைகளுக்காக 'டுவார்ட் போர்ட்' மூலமா ஆங்காங்கே மினி குடிநீர்த் தொட்டிகள் அமைச்சுக் கொடுத்தோம். கால்நடைகள் தண்ணீர் குடிக்கக் காடுகளில் தண்ணீர்த் தொட்டிகள் அமைச்சு, அதுல அந்தந்த கிராமங்கள்ல உள்ளவங்களை வெச்சு தண்ணீர் நிரப்பச் சொன்னோம். விவசாயிகளுக்கு சாகுபடி செய்யத் தண்ணீர் கிடைச்சது. கிராமப் பொதுமக்களுக்கு குடிநீர்ப் பற்றாக்குறைத் தீர்த்து வைக்கப்பட்டது. இதுக்கும் மேலா கால்நடைகளோட குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது.
