PUBLISHED ON : நவ 25, 2024
'நான் நினைக்கிறேன்...' இப்படித் தொடங்கிப் பேசுவீர்களா?
அடிக்கடி இப்படிச் சொன்னால் bore அடிக்கும் அல்லவா? அதுவுமில்லாமல், எல்லோருமே இப்படித்தான் பேசுவார்கள். நாம் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதும் முக்கியம் ஆச்சே...
அதனால், இந்த, 'நான் நினைக்கிறேன்' என்பதையே வெவ்வேறு விதங்களில் எப்படிச் சொல்லலாம் என்று பார்ப்போம்.
நான் நினைக்கிறேன்
என் கருத்தில்
என் பார்வையில்
என்னைப் பொறுத்தவரை
எனக்குத் தெரிந்தபடி
எப்படித் தோன்றுகிறது என்றால்
நான் என்ன சொல்கிறேன் என்றால்
நான் பார்க்கும் விதத்தில்
என் கருத்து என்னவென்றால்
எனக்குத் தோன்றுகிறது
என்று நம்புகிறேன்
இவையெல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால் வந்தவை. ஆங்கிலத்தில் இப்படிச் சொல்வோம்:
I think
in my opinion
in my perspective
as far as I am concerned
it seems to me that
it appears that
from what I can say
as I see it
My impression is that
it strikes me that
it is my belief that