தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/துறுதுறு நெறுப்புக் கோழி

துறுதுறு நெறுப்புக் கோழி

துறுதுறு நெறுப்புக் கோழி


PUBLISHED ON : ஜூன் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெருப்புக் கோழிகளின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. நெருப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெப்பப் பிரதேசத்தில் தாக்குப் பிடிக்கும் விதத்தில் இதன் உடலமைப்பு உள்ளதால் இந்தப் பெயர் வந்தது.

நெருப்புக் கோழியின் விலங்கியல் பெயர் 'ஸ்ட்ருதியோ கேமெலஸ்' (Struthio Camelus).

குதிரைகளுக்குப் பூட்டுவது போல சேணங்கள், கடிவாளம் பூட்டி நெருப்புக் கோழிகளை வண்டி இழுக்கச் செய்வதை மேலை நாடுகளில் பார்க்கலாம்.

நெருப்புக்கோழிகளுக்கான ஓட்டப் பந்தயமும், நெருப்புக்கோழி சவாரிப் போட்டியும் ஆப்பிரிக்கா, கென்யா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பிரபலம்.

கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சஹாரா பகுதிகளில் உள்ள வறண்ட புல்வெளிகளில் இவை வசிக்கும்.

நெருப்புக்கோழி ஆபத்துக் காலங்களில் தன் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளும் என்பார்கள். அது உண்மையல்ல. ஆண் நெருப்புக் கோழி ஆறு அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட குழிகளைத் தோண்டும். இக்குழிகளில் பெண் நெருப்புக்கோழி முட்டை இடும். தாக்க வரும் எதிரிகளின் கண்களுக்கு முட்டைகள் தெரியாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. இரவில் ஆண் பறவையும், பகலில் பெண் பறவையும் முட்டைகளை அடைகாக்கும். அடைகாக்கும் நெருப்புக் கோழிகள் அவ்வப்போது தங்கள் தலைகளால் முட்டைகளைத் திருப்பி வைக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் அவை தலையை மண்ணுக்குள் விட்டிருப்பது போலத் தோன்றும்.

பொதுவாக, தாவர உணவுகளை உண்ணும். சில சமயங்களில் சிறிய புழு, பூச்சி, ஓணான் போன்ற ஊர்வனவற்றையும் சாப்பிடும். ரியா, ஈமு, கசோவரி போன்றவை நெருப்புக் கோழிக் குழுவைச் சேர்ந்த பிற பறவைகள்.

நெருப்புக் கோழி பல பட்டியல்களில் முதல் இடம் வகிக்கும் ஒரு பறவை!

உயரத்திலும் முதலிடம் இதற்குதான்! உயரம் 6 - 9 அடி

30 - 40 வருடங்கள் வாழும் காலம்

இதன் சிறகுகள், கடுமையான வெப்பத்தில் இருந்து காக்கும் வகையில் மென்மையான பொதி போல் இருக்கும். இறக்கையின் முடிவில் கொக்கி போன்ற இரண்டு நகங்கள் இருக்கும். இதன் மூலம் எதிரிகளைத் தாக்கும்.

இவற்றின் சிறகுகளைக் கொண்டு தொப்பி, தோல் அலங்காரப் பொருட்கள் போன்றவை செய்யப்படுகின்றன. இதன் இறைச்சி உணவாகவும் பயன்படுகிறது. இப்பறவையை அதன் மாமிசத்திற்காகவும் சிறகுகளுக்காகவும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கின்றனர்.

கண்கள் 2 அங்குலம் பெரிய கண்களை உடைய பறவை.

உலகிலேயே அதிக எடை உள்ள பறவை எடை 63 - 145 கிலோ

நெருப்புக் கோழிக்குப் பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காக, இரையோடு கூடவே சிறுசிறு கற்களையும் விழுங்கும்.

மூளை 2 அங்குலத்தைவிட குறைவு நெருப்புக் கோழியின் மூளை அளவு அதன் கண்களைவிடச் சிறியது.

உலகிலேயே அதிக எடையுள்ள முட்டை இடும் பறவை. 1.400 கிலோ 40 கோழி முட்டைகளுக்குச் சமம்.

16 அடி ஒரு தாவலில் 16 அடி வரை தாவக்கூடியது.

இறக்கை நீளம்: 2 மீட்டர் நெருப்புக் கோழி பெயருக்குத்தான் பறவை. இரண்டு மீட்டர் நீளம் கொண்ட இறக்கைகள் இருந்தாலும் இவற்றால் பறக்க முடியாது.

70 கி.மீ. மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். (நெருப்புக் கோழிகள் மிக வேகமாக ஓடக்கூடியவை) அவற்றை உண்ண வரும் சிங்கம், ஓநாய் போன்றவற்றிடம் இருந்து ஓடியே தப்பித்துவிடும்.

2 விரல்கள் நெருப்புக் கோழியின் கால்கள் மிகவும் பலம் பொருந்தியவை. மற்ற எந்தப் பறவைக்கும் இல்லாதவாறு நெருப்புக் கோழியின் கால்களில் வளைவான இரண்டு பெரிய விரல்கள் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us