தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு


PUBLISHED ON : ஜூலை 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்றாட வீட்டுப் பணிகள், பள்ளிப் பயிற்சிகள், ஆடைகள் உருவாக்குதல், தோட்டப்பணிகள், தொழிற்சாலைகள் எனப் பலவிதங்களில் கத்தரிக்கோலைப் பயன்படுத்துகிறோம். இந்த கத்தரிக்கோல் எப்போது, யாரால் உருவாக்கப்பட்டது? கத்தரிக்கோல் எகிப்து நாட்டில் கி.மு.1500ல் கண்டுபிடிக்கப்பட்டது. மெசபடோமியாவில் சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே கத்தரிக்கோல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் கத்தரிக்கோல் அபூர்வமான பொருளாக கருதப்பட்டது. சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் விலை உயர்ந்ததாக இருந்தது. இந்நிலை மாறி, கி.பி. 1761 முதல் சாதாரணமானவர்களும் கத்தரிக்கோலைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். ராபர்ட் ஹிஞ்ச்ளிஃப் (Robert Hinchliffe) என்பவர் முதன் முதலில் தொழிற்சாலை அமைத்து கத்தரிக்கோலைத் தயாரிக்க ஆரம்பித்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீண்ட காலத்திற்குப் பயன்படக்கூடிய, மழுங்காத, கூர்முனை கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்தரிக்கோல்கள் தயாரிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us