
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்தில் 'விட்டாலிட்டி பிளாஸ்ட்' டி-20 தொடர் நடக்கிறது. இதில் முதலில் களமிறங்கிய லீசெஸ்டர்ஷயர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 189 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பர்மிங்ஹாம் அணி, ஆக்கர்மேன் சுழலில் சிக்கி 17.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லீசெஸ்டர்ஷயர் அணி, 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த அணியின் கோலின் ஆக்கர்மேன் 4 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் டி-20 வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் மலேசியப் பந்து வீச்சாளர் அருள் சுப்பையா 5 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது சாதனையாக இருந்தது.

