தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் தேதி

தேதி சொல்லும் தேதி

தேதி சொல்லும் தேதி


PUBLISHED ON : ஆக 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 12, 1892 - எஸ்.ஆர். ரங்கநாதன் பிறந்த நாள்

இந்திய நூலக அறிவியலின் தந்தை. நூலக நிர்வாகம் தொடர்பாக 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இவரது பிறந்த நாள் தேசிய நூலகர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 12, 1919 - விக்ரம் சாராபாய் பிறந்த நாள்

இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை. இஸ்ரோ ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக இருந்து, ராக்கெட் வடிவமைக்கும் திட்டங்களை வகுத்தார். தும்பா ராக்கெட் ஏவுதள நிலையத்துக்கு, இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13, 1926 - ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த நாள்

கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளர், அரசியல்வாதி. அமெரிக்க ஆதிக்கத்தைப் புரட்சியால் எதிர்த்து அதிபரானார். உலகிலேயே அதிக காலம் (49 ஆண்டுகள்) ஆட்சி செய்து மக்களின் நம்பிக்கைக்கு உரியவரானார்.

ஆகஸ்ட் 15, 1947 - இந்திய சுதந்திரத் திருநாள்

இருநூறு ஆண்டு கால ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடி இந்தியா சுதந்திர நாடானது. சுதந்திரத்தையும் தியாகிகளையும் நினைவுகூர இந்த நாள் இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 15, 1769 - நெப்போலியன் போனபார்ட் பிறந்த நாள்

'மாவீரன்' என போற்றப்பட்ட பிரெஞ்சுப் பேரரசர். அரசியல், பொருளாதார, சட்டத் துறைகளில் பல சீர்திருத்தங்கள் செய்தார். இவர் உருவாக்கிய புதிய சட்டங்கள் 'கோட் ஆஃப் நெப்போலியன்' என அழைக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 18, 1900 - விஜயலஷ்மி பண்டிட் பிறந்த நாள்

நேருவின் தங்கை. விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். சுதந்திரத்துக்குப் பிறகு, பல நாடுகளுக்குத் தூதுவராகப் பணியாற்றினார். இவரது வாழ்க்கை வரலாற்று நூல் 'The Scope of Happiness: A Personal Memoir'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us